Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: டாசில் இந்தியாவுக்கு சாதகம்.. பிளேயிங் லெவனில் சூர்யகுமார் ட்விஸ்ட்..முக்கிய வீரர் இல்லை

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டி20 போட்டி கான்பெராவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. நாங்கள் இங்கு விளையாட போதெல்லாம் நல்ல ஆடுகளமாக தான் அமைந்திருக்கிறது. இந்த போட்டிக்கு எதிர்நோக்கி காத்திருக்கின்றோம். உலகக்கோப்பை தொடருக்காக அனைவரும் சிறப்பான முறையில் பயிற்சி செய்து வருகின்றனர்.

Ind vs aus

எங்கள் அணியில் 11 பேரில் சில பேட்டர்கள், சில பௌலர்கள் சில ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார்.இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரிய குமார் யாதவ், நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் இருந்தோம். நான் கேள்விப்பட்டவரை ஆடுகளம் இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது கொஞ்சம் தொய்வாக மாறும் என்று அறிந்தேன்.

எனவே முதலில் பேட்டிங் செய்வது நல்லது தான் என நினைக்கின்றேன். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரர்களுக்கும் என்னென்ன பணி என்பது நன்றாக தெரியும். 11 வீரர்களை தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. ஆனால் அது நல்ல தலைவலி தான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கையாண்ட அதே ஃபார்முலாவை இன்னும் கையாளுகின்றோம்.

வாஷிங்டன் சுந்தர், ஜித்தேஷ் ஷர்மா, ஆர்ஸ்தீப் சிங், நிதீஷ்குமார் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்று சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி ஹர்ஷித்ராணா, பும்ரா என 2 வேகப்பந்துவீச்சாளர்களையும், குல்தீப் ,வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் பட்டேலை சுழற் பந்துவீச்சாளராகவும் சிவம் துபேவை ஆல்ரவுண்டராகவும் பயன்படுத்த உள்ளது.

இந்தியாவின் டாப் வரிசையில் அபிஷேக் ஷர்மா, கில்,சூரியகுமார் திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் முதல் மூன்று டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய தோல்வியை தழுவியது. அதன் பிறகு விளையாடிய 18 போட்டிகளில் 16 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 29, 2025, 13:34 [IST]
Other articles published on Oct 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+