
அரையிறுதி சுற்று
கிட்டத்தட்ட 15 டெஸ்ட் தொடர்களை தேர்வு செய்து அதில் இருந்து சிறந்த தொடர் எது என்பதை சமூக வலைதளங்களில் ரசிகர்களின் வாக்குகளுடன் கணக்கிடப்பட்டு வந்தது. இதன் அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளின் 2020 டெஸ்ட் தொடரும், இந்தியா - பாகிஸ்தான் 1999 டெஸ்ட் தொடரும் போட்டியிட்டது.

இந்தியா - ஆஸ்திரேலியா
சுமார் 70 லட்சம் ரசிகர்கள் இதற்காக வாக்களித்திருந்த நிலையில் தி அல்டிமேட் டெஸ்ட் தொடர் எனும் பட்டம், கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளின் 'பார்டர் கவாஸ்கர் டிராபி' தொடருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மோசமான தோல்வி
இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத தொடர் இதுவாகும். 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வரலாற்று வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வியடைந்தது. குறிப்பாக 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது.

விஸ்வரூபம்
அதன் பின்னர் விராட் கோலி, தாய் நாடு திரும்ப, ரோகித் சர்மா, முகமது ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினர். பின்னர் கேப்டன்சிப்பை கையில் எடுத்த அஜிங்கியா ரஹானே 2 டெஸ்டில் வெற்றி, 3வது டெஸ்டில் டிரா, 4வது டெஸ்டில் மீண்டும் வெற்றி என இந்திய அணிக்கு தொடரை வென்று கொடுத்தார். இந்த தொடரில் இளம் வீரர்கள் முக்கிய பங்காற்றினர். முதல் போட்டியில் படுதோல்வி சந்தித்த சூழலில் அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணி எடுத்த விஸ்வரூபம் இன்று வரை பாராட்டப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











