Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: பும்ராவால் டீமை விட்டே தூக்கி எறியப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி-யின் கிரிக்கெட் வாழ்வை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் நாதன் மெக்ஸ்வீனியின் விக்கெட்டை நான்கு முறை வீழ்த்தி உள்ளார் பும்ரா.

நாதன் மெக்ஸ்வீனி ஆடிய ஆறு இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே 10 ரன்களை தாண்டி ரன் சேர்த்தார். மொத்தமாக ஆறு இன்னிங்ஸ்களில் அவர் 72 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்து இருக்கிறார். துவக்க வீரராக களமிறங்கிய அவர் பும்ராவின் பந்துவீச்சில் புதிய பந்தில் தனது விக்கெட்டை இழந்து வந்தார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி உள்ளது. அதற்கு பும்ரா முக்கிய காரணமாகி இருக்கிறார். பும்ராவுக்கு எதிராக நாதன் மெக்ஸ்வீனியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. மேலும், அவரது பந்துவீச்சிலேயே விக்கெட்டை இழந்து வந்ததால் இப்போது நீக்கப்பட்டு இருக்கிறார்.

சாம் கோன்ஸ்டாஸ் என்ற 19 வயது துவக்க வீரர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் நாதன் மெக்ஸ்வீனி-க்கு பதிலாக துவக்க வீரராக களம் இறங்குவார் என ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நாதன் மெக்ஸ்வீனி ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டிகளில் துவக்க வீரராக ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மூன்றாம் வரிசையில் தான் ஆடி வந்தார். ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் டேவிட் வார்னரின் ஓய்வுக்கு பின் சரியான துவக்க வீரர் என யாரும் இல்லை. அதனால் நாதன் மெக்ஸ்வீனி வலுக்கட்டாயமாக துவக்க வீரராக ஆடவைக்கப்பட்டார். இந்திய அணிக்கு எதிராகவே அறிமுகமும் ஆனார். ஆனால், தனது முதல் மூன்று போட்டிகளில் 72 ரன்கள் மட்டுமே எடுத்து தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி -

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸீன் அபோட், ஸ்காட் போலான்ட், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷேன், நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், ஜை ச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்

Story first published: Friday, December 20, 2024, 14:18 [IST]
Other articles published on Dec 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+