மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா சரியாக செயல்படவில்லை என முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் ஜட்டின் பரஞ்சப்பே விமர்சனம் செய்திருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பும்ராவின் செயல்பாடு மிகவும் முக்கிய காரணமாக இருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். இதில் பும்ரா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜட்டின் பரஞ்சப்பே, பெர்த் டெஸ்ட் போட்டியில் செயல்பட்டதை போல் இந்திய வீரர்கள் அடிலெய்ட் டெஸ்டில் பந்து வீசவில்லை என்று நினைக்கின்றேன். இந்தியாவை விட ஆஸ்திரேலிய வீரர்கள் தான் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்கள்.இன்னும் சொல்லப்போனால் பும்ரா தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கொஞ்சம் பந்தை ஃபுல் லெங்தில் வீசி இருக்க வேண்டும். ஆனால் நமது வீரர்கள் பந்துவீச்சில் சொதப்பி இருக்கிறார்கள். இதன் மூலம் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது அடிலெய்டில் உள்ள மைதானம் பவுலர்களுக்கு சாதகமாக தான் இருந்தது. ஆனால் நமது வீரர்கள் தான் அதை தவறவிட்டார்கள் என்று பரஞ்சப்பா புகார் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பும்ரா 120, 125, 130 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி இருந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறதா என்ற கேள்வியும் சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது. இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள ரோஹித் சர்மாவின் பணிச்சுமையை கண்காணிக்க வேண்டியது முக்கியம் என்று கூறியிருந்தார்.
எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவாஸ்கர் இரண்டு நாட்களிலேயே போட்டி முடிவடைந்து விட்டதால் பும்ராவுக்கு ஓய்வு வழங்கக் கூடாது என்று கவாஸ்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.