Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனவெறியுடன் திட்டிய ஆஸி. ரசிகர்கள்.. பும்ரா, சிராஜ் அதிரடி புகார்.. பரபர தகவல்!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட்டில் இனவெறி சர்ச்சை வெடித்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் கேப்டன் ரஹானே தலைமையில் இந்திய வீரர்கள் மேட்ச் ரெப்ரீ டேவிட் பூன்-இடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

குரங்கு எனக்கூறி இனவெறி தாக்குதல்.. பந்துவீச்சை நிறுத்திய சிராஜ்.. 10 நிமிடம் போட்டி நிறுத்தம்..!

மூன்றாம் நாள் முடிவில் ரஹானே, அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ் இது பற்றி கள அம்பயரிடம் புகார் அளித்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீண்டல்

சீண்டல்

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு சீண்டி வந்தன. தற்போது போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இந்திய வீரர்களை சீண்டி உள்ளனர்.

இன ரீதியாக..

இன ரீதியாக..

சிட்னி டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ்ஜை சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் இன ரீதியாக திட்டியதாக கூறப்படுகிறது.

புகார்

புகார்

இரண்டாம் நாள் இது குறித்து இந்திய அணி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மூன்றாம் நாளிலும் இந்த போக்கு தொடரவே இந்திய அணி கேப்டன் அஜின்க்யா ரஹானே தலைமையில் பும்ரா, முகமது சிராஜ் அம்பயரிடம் புகார் அளித்தனர்.

வாடிக்கை

வாடிக்கை

மேலும், மூன்றாம் நாள் முடிவில் மேட்ச் ரெப்ரீ டேவிட் பூன்-இடமும் புகார் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இன ரீதியான வார்த்தைகளை சொல்லி சீண்டுவது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலரின் வாடிக்கையாக உள்ளது. இதற்கு முன்பும் இது போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Story first published: Saturday, January 9, 2021, 16:20 [IST]
Other articles published on Jan 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+