
ஜடேஜா
இன்று ஜடேஜா காயம் காரணமாக வெளியேறி உள்ளார். சமி நீக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு பதிலாக சாகல், ஷரத்துல் தாகூர் உள்ளே வந்துள்ளனர்.இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியில் தவான், ராகுல், கோலி, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ், ஹர்திக் பாண்டியா,ஷரத்துல், சாஹல், சாகர், நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.

எப்படி
இன்று இந்திய அணி இன்று விளையாடும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பும்ரா அணியில் இடம்பெறவில்லை. போன போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கிறேன் என்றுதான் அவரை கோலி அணியில் எடுக்கவில்லை. ஆனால் இன்றைய போட்டியிலும் கோலி பும்ராவிற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

காரணம்
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்டுகிறது. அதன்படி பும்ரா பார்ம் இன்றி திணறி வருகிறார். இவர் தனது பார்மை திரும்ப பெற ஓய்வு வேண்டும். இதனால் அவரின் முழு சம்மதத்தோடு இரண்டு போட்டிகளாக ஓய்வு எடுத்து வருகிறார். டெஸ்ட் தொடருக்கு முன் பார்மிற்கு திரும்ப வேண்டும் என்பதால் அவர் உட்கார வைக்கப்பட்டு உள்ளார்.

வேறு காரணம்
இன்னொரு பக்கம் முன்பெல்லாம் இப்படி பும்ராவை உட்கார வைக்க முடியாது. காரணம் இந்திய அணியில் டெத் ஓவர் வீச ஆட்கள் இருக்காது. ஆனால் இப்போது நடராஜன் அந்த பணியை சிறப்பாக செய்கிறார். கடைசி ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டும் எடுக்கிறார். இதனால் கோலி இவரை நம்புகிறார்.

எதிர்காலம்
இந்திய அணியில் இவர் நிரந்தரமாக இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் மற்றும் முதல் டி 20 போட்டியில் இவர் ஆடிய விதம் பலரையும் கவர்ந்து இருக்கிறது. முக்கியமாக இவரின் பவர்பிளே பவுலிங் மற்றும் டெத் ஓவர் பவுலிங் பெரிய அளவில் நம்பிக்கையை அளித்துள்ளது.

சிறப்பு
இவருக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கோலியே பாராட்டி உள்ளார். இதன் காரணமாக தற்போது இவரை நம்பி பும்ராவிற்கு தேவையான ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது பும்ரா தற்காலிகமாக ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

பும்ரா
பும்ரா மீண்டும் பார்ம் திரும்பிய பின், நடராஜன், பும்ரா இருவரும் இணைந்து பவுலிங் செய்வதை பார்க்க முடியும். இனி பவுலிங்கில் பும்ரா, நடராஜன், ஷமி அல்லது ஷரத்துல் ஆகியோர் இந்திய அணியின் முதல் தேர்வாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications