For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில்.. படுமோசமான ரெக்கார்டு.. இளம் வீரரை துவம்சம் செய்த ஆஸி.!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாஹல் படுமோசமான பந்துவீச்சு ரெக்கார்டை பதிவு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடியது. சாஹல் பந்துவீச்சை ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் குறி வைத்து தாக்கினர்.

சாஹல் ஒருநாள் போட்டி வரலாற்றில் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

"ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்".. அவர் வந்ததை பார்த்தீர்களா?.. ஹர்திக் பாண்டியா செய்த காரியம்.. பின்னணி!

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் தொடர் துவங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்தது வார்னர் - ஆரோன் பின்ச் ஜோடி.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

வார்னர் 69 ரன்களும், பின்ச் 114 ரன்களும் குவித்து மிரட்டினர். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக பேட்டிங் செய்தார். 62 பந்துகளில் சதம் கடந்தார். மேக்ஸ்வெல் தன் பங்கிற்கு 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்து மிரட்டினார்.

வாரி இறைத்த சாஹல்

வாரி இறைத்த சாஹல்

இந்திய அணி ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளரை மட்டுமே களமிறக்கியது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சாஹல் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அவர் ரன்களை வாரி இறைத்தார். அவரது பந்துவீச்சில் 5 ஃபோர், 5 சிக்ஸ் அடித்தது ஆஸ்திரேலிய அணி.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

அவர் 10 ஓவர்களில் 89 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் வீழ்த்தினார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் இதுவே ஒரு சுழற் பந்துவீச்சாளரின் மோசமான பந்துவீச்சாகும். சாஹலை குறி வைத்து தாக்கியதால் இந்த மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

ஷமி ஆறுதல்

ஷமி ஆறுதல்

இந்திய அணியில் மற்ற பந்துவீச்சாளர்களும் மோசமாகவே பந்து வீசினர். ஷமி மட்டும் ஆறுதல் அளித்தார். அவர் 10 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பும்ரா, சைனி ஆகியோரும் ரன்களை வாரி இறைத்து இருந்தனர்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்து இருந்தது. இதுவே அந்த அணி இந்தியாவுக்கு எதிராக குவித்த அதிகபட்ச ரன் ஆகும். இந்திய அணி துவக்கத்திலேயே விக்கெட்களை இழந்து சேஸிங்கில் தடுமாறியது.

Story first published: Friday, November 27, 2020, 17:21 [IST]
Other articles published on Nov 27, 2020
English summary
IND vs AUS : Chahal registered worst ODI bowling by an Indian spinner
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X