Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"Clown Kohli" விராட் கோலியை ஜோக்கராக மாற்றிய ஆஸ்திரேலியா பத்திரிகைகள்.. கொதிக்கும் ரசிகர்கள்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் அறிமுக வீரரான சாம் கோன்ஸ்டாஸ் உடனான வாக்குவாதத்திற்கு பின் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலியை ஆஸ்திரேலியா பத்திரிகைகள் கடுமையாக சாடி வருகின்றன. இதனிடையே வெஸ்ட் ஆஸ்திரேலியாவை பத்திரிகை ஒன்று விராட் கோலியை, Clown Kohli என்று எழுதியிருப்பது அவரின் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் 12வது வீரராகவே அந்நாட்டு பத்திரிகைகள் எப்போதும் செயல்படும். ஆஸ்திரேலியா அணியின் தவறுகளை பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், எதிரணியின் தவறுகளுக்காக கழுகை போன்ற காத்திருப்பார்கள் என்று விமர்சகர்கள் கூறுவார்கள். கடந்த ஆஷஸ் தொடரின் போது கூட பேர்ஸ்டோவை ஆஸ்திரேலியா அணியின் அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்தார்.

ind vs aus virat kohli sam konstas vs


அது இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா பத்திரிகைகளில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முகத்தை குழந்தையின் உடல் பொருத்தி, "Cry Babies" என்று நக்கல் செய்தனர். இதன்பின் இங்கிலாந்து மீடியாக்கள் வேண்டுமென்றே அலெக்ஸ் கேரி முடி வெட்டியதற்கு பணம் கொடுக்கவில்லை என்று மோசமான சர்ச்சையை உருவாக்கினர்.

இதனால் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு அந்நாட்டு பத்திரிகைகள் எப்போதும் பக்க பலமாக இருந்து வந்திருக்கின்றன. 2வது டெஸ்டின் போது கூட முகமது சிராஜ் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதற்கு கடுமையான விமர்சிக்கப்பட்டது. இதன்பின் விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்டோரை அந்நாட்டு பத்திரிகைகள் வம்புக்கு இழுத்தனர். ஆனாலும் இந்திய அணி வீரர்கள் கவலை கொள்ளாமல் தங்களின் பணிகளை செய்தனர்.

இந்த நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ்-ன் தோளில் விராட் கோலி இடித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் விராட் கோலி ஒரு அறிமுக வீரரை ஸ்லெட்ஜிங் செய்யலாமா, எப்படி அவர் தோளில் சென்று இடிக்கலாம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இதன்பின் அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் விராட் கோலியை கிண்டல் செய்யும் வகையில், வெஸ்ட் ஆஸ்திரேலியா பத்திரிகை ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கடுமையாக விமர்சித்துள்ளது. ஜோக்கர் எப்படி மூக்கில் ஒரு பந்தை வைத்திருப்பாரோ, அதுபோல் விராட் கோலியின் மூக்கில் பந்தை வைத்து "Clown Kohli" என்று கிண்டல் செய்துள்ளது.


அதேபோல் கடைசி டெஸ்ட் போட்டிக்கான தடையில் இருந்து விராட் கோலி தப்பிவிட்டதாகவும் விமர்சித்துள்ளது. இது நாளை வெளியாகவுள்ள வெஸ்ட் ஆஸ்திரேலியா பத்திரிகையின் பின்பக்க அட்டை படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிய நிலையில், விராட் கோலியின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Story first published: Thursday, December 26, 2024, 22:24 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+