For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Sky மீம்ஸ்- இது நடிப்பு மேடம்..ODIயில் நடிப்பான்.. டி20 வந்தா சும்மா சில்லு சில்லுனு நடப்பான் மேடம்

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் கேப்டனாக களம் இறங்கி 42 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். ஆனால் இந்த இன்னிங்சை பார்த்து ரசிகர்கள் கோபமடைந்தார்கள்.

ஏனென்றால் இறுதி போட்டியில் இந்தியா தடுமாறியபோது சூரியகுமார் யாரும் இது மாதிரி தான் களமிறங்கினார். அப்போது இப்படி ஒரு ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தால் இந்தியாவின் தலையெழுத்து அன்று மாறி இருக்கும்.

Ind vs aus Cricket memes - Fans trolling suryakumar for scoring in t20 matches only

இதனால் ரசிகர்கள் சூரிய குமார் யாதவை நேற்று திட்டும் வகையில் மீம் செய்து கிண்டல் அடித்து வந்தார்கள். சமூக வலைத்தளத்தில் மேடம் இது நடிப்பு மேடம் என்று ஒரு மீம் அண்மையில் வைரலாகி வந்தது. இந்த மீம்மை சூரியகுமார் போல் பயன்படுத்தி, மேடம் இது நடிப்பு மேடம்.. ஒருநாள் கிரிக்கெட்டில் ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிப்பான்! ஆனால் இது போல் டி20 வந்தால் சும்மா சில்லு சில்லு சில்லுனு நடப்பான் மேடம் என்று மீம் போட்டு சூரிய குமார் யாதவ் வறுத்தெடுத்து இருக்கிறார்கள்.

Ind vs aus Cricket memes - Fans trolling suryakumar for scoring in t20 matches only

இதேபோன்று சிட்டிசன் படத்தில் நடிகர் அஜித் ஏலே என் வயிறு எரியுதுலே என்று கத்தி அழுவது போல், சூரியகுமார் நேற்று அடித்த ஒவ்வொரு ஷாட்டையும் பார்த்து தங்களுடைய வயிறு எரிவது போல் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

Ind vs aus Cricket memes - Fans trolling suryakumar for scoring in t20 matches only

இதேபோன்று நடிகர் விஜயின் போக்கிரி ஸ்டில்லில் சோகமாக இருப்பதை டெம்ப்ளட்டாக பயன்படுத்தி ரோகித் சர்மா நேற்று சூரியகுமார் இன்னிங்ஸை பார்த்து கடுப்பாகி இருப்பது போலவும் இதை உலக கோப்பையில் ஆடியிருந்தால் என்ன என்பது போலவும் மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.

Ind vs aus Cricket memes - Fans trolling suryakumar for scoring in t20 matches only

சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் பலசாலியாகவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் மொக்கையாக விளையாடுவதையும் சித்தரித்து டி20-ல் நல்ல பலமான வீரராகவும் ஓடியில் பலம் குன்றிய வீரராகவும் இருப்பது போல் புகைப்படத்தை போட்டு சித்தரித்து இருக்கிறார்கள்.

இதேபோன்று மற்றொரு மீமில் சாட்டை படத்தில் சமுத்திரக்கனியை பார்த்து தம்பி ராமையா திட்டும் புகைப்படத்தை பயன்படுத்தி உலகக்கோப்பை பைனலில் அடிக்காமல் இப்போ அடிக்கிறதை பார்த்தா எனக்கு எரிய கூடாத இடமெல்லாம் எரியுதுடா என்று ரசிகர்கள் திட்டுவது போல் மீம்சை தெறிக்கவிட்டு இருக்கிறார்கள்.

Story first published: Friday, November 24, 2023, 17:50 [IST]
Other articles published on Nov 24, 2023
English summary
Ind vs aus Cricket memes - Fans trolling suryakumar for scoring in t20 matches only Sky மீம்ஸ்- இது நடிப்பு மேடம்..ODI யில் நடிப்பான். டி20 வந்தா சும்மா சில்லு சில்லுனு நடப்பான் மேடம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+