Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்தை சேதப்படுத்த முயன்ற ஆஸி. வீரர்? பதறிய ரசிகர்கள்.. கண்டு கொள்ளாத அம்பயர்கள்! என்ன நடக்குது?

Recommended Video

World Cup 2019-ஆஸி. மீண்டும் பால் டெம்பரிங்கில் ஈடுபட்டதா ? பதறிய ரசிகர்கள்

லண்டன் : இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் இடையே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஒருவரின் நடவடிக்கை சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்ததால், ரசிகர்கள் பதற்றமடைந்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ரோஹித் சர்மா - ஷிகர் தவான் நிதானமாக துவங்கி, பின்னர் அதிரடிக்கு மாறி ரன் குவித்து வந்தனர்.

ஆடம் சாம்பா

ஆடம் சாம்பா

ரோஹித் சர்மா - தவான் ஜோடியை பிரிக்க பலரையும் முயன்று பார்த்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், இறுதியாக சுழற் பந்துவீச்சாளர் ஆடம் சாம்பாவை அழைத்தார்.

பேன்ட் பாக்கெட்டில்..

ஆடம் சாம்பா வந்தது முதல், தன் பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு துழாவிக் கொண்டே இருந்தார். முதலில் ஒரு முறை அவர் அப்படி செய்த போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர், அவர் அடிக்கடி கையை பேன்ட் பாக்கெட்டில் விடவே, பலருக்கும் "பால் டேம்பரிங்" நினைவுக்கு வந்தது.

பந்து சேதம்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திட்டம் போட்டு பந்தை சேதப்படுத்தியது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரிந்த ஒன்று. அப்போது கேமரான் பான்கிராப்ட், இதே போன்று பாக்கெட்டில் கையை விட்டு, உள்ளே உப்புத்தாள் வைத்து பந்தை சேதப்படுத்தினார்.

கொதித்த ரசிகர்கள்

அதே போன்று , ஆடம் சாம்பாவும் செய்கிறாரா? என்று இந்திய ரசிகர்கள் கொதித்தனர். இத்தனைக்கும் ஆடம் சாம்பா அம்பயரின் அருகே நின்று தான் பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு, பின் பந்து வீசும் முன் பந்தை கைகளில் நன்றாக தேய்த்தார்.

ரசிகர்கள் பகிர்ந்தனர்

ரசிகர்கள் பகிர்ந்தனர்

சாதாரணமான பந்துவீச்சாளர்கள் பந்தை கைகளில் தேய்ப்பது வழக்கமான செயல் தான். ஆனால், சாம்பா சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்பதால் இந்திய ரசிகர்கள் உடனடியாக அந்தக் காட்சிகளை படம் எடுத்து இணையத்தில் வேகமாக பகிர்ந்தனர்.

விளக்கம்

விளக்கம்

அதன் பின்பு சிலர் இது குறித்த விளக்கத்தை அளித்தனர். ஆடம் சாம்பா, கைகளை சூடாக வைத்துக் கொள்ளும் "ஹேண்ட் வார்மர்" என்ற பொருளை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பந்து வீசும் முன் கைகளை சூடாக்கி விட்டு பந்து வீசுவார் என கூறினார்கள்.

தொடர்ந்து புகார்

தொடர்ந்து புகார்

இதையடுத்தே சில இந்திய ரசிகர்கள் ஆசுவாசம் அடைந்தனர். எனினும், பல ரசிகர்கள் சாம்பா புகைப்படங்களை பகிர்ந்து "பால் டேம்பரிங்" செய்கிறார் என புகார் கூறி வருகிறார்கள்.

Story first published: Sunday, June 9, 2019, 18:01 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+