Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்டியாவாக மாறிய தோனி.. அந்த 14 பந்துகள்.. பழைய நினைவுகளுக்கு போன ரசிகர்கள்!!

Recommended Video

Worl Cup 2019 | 14 பாலில் மரண பயத்தை காட்டிய தல.. வாயை பிளந்த கோலி!

லண்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தோனி குறைந்த நேரமே பேட்டிங் செய்தாலும் கலக்கலாக ஆடினார். ரசிகர்களை பழைய நினைவுகளுக்கு கூட்டிச் சென்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப, இந்த போட்டி இருந்தது. இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

ரன் ரேட் திட்டம்

ரன் ரேட் திட்டம்

இந்தியா முதலில் பேட்டிங் ஆடிய போது, தவான் சதமும், ரோஹித் அரைசதமும் அடிக்க, இந்தியா நல்ல நிலையில் இருந்தது, களத்தில் கோலி இருந்தார். அதனால், உடனடியாக ரன் ரேட்டை ஏற்ற வேண்டும் என்ற நிலையில், ஹர்திக் பண்டியா, ராகுல் மற்றும் தோனியை முந்திக் கொண்டு களமிறங்கினார்.

பண்டியா அபாரம்

பண்டியா அபாரம்

இந்த நேரத்தில் தோனி இறங்கினால் தான் சரியாக இருக்கும் என சிலர் கூறினாலும், பண்டியா 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்து தான் முன்னே இறங்கியது சரிதான் என நிரூபித்தார்.

உள்ளே வந்த தோனி

உள்ளே வந்த தோனி

அவர் கடைசி 5 ஓவர்கள் இருக்கும் போது ஆட்டமிழந்தார். இப்போது யாரை களமிறக்குவார் கோலி, என காத்துக் கொண்டு இருந்த போது தோனி பெரும் வரவேற்புடன், உள்ளே வந்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

தோனி வெறும் 14 பந்துகள் மட்டுமே சந்தித்தார். அதில் 1 சிக்ஸ், 3 ஃபோர் அடித்து 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். உண்மையில், நீண்ட காலமாக ஹர்திக் பண்டியா கடைசி 5 ஓவர்கள், 10 ஓவர்கள் இருக்கும் போது களமிறங்கி அதிரடியாக ரன் குவித்து ஆட்டமிழப்பார்.

பண்டியாவாக மாறிய தோனி

பண்டியாவாக மாறிய தோனி

அவரது இடத்தை எடுத்துக் கொண்ட தோனி, பண்டியாவாகவே மாறி அதிரடி ஆட்டம் ஆடினார். இதைப் பார்த்த போது, தோனியின் துவக்க நாட்கள் நினைவுக்கு வந்தது. கங்குலி தோனியை அறிமுகம் செய்த போது சில போட்டிகள் வரை அவர் 6, 7 ஆகிய இடங்களில் தான் ஆடி வந்தார்.

Story first published: Sunday, June 9, 2019, 23:55 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+