Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு தடை போட்டாலும்.. இவங்களுக்கு தடை போட முடியுமா? கெத்து காட்டிய தோனி ரசிகர்கள்!

Recommended Video

Dhoni Gloves| தோனிக்கு தடை போட்டாலும்.. இவங்களுக்கு தடை போட முடியுமா?

லண்டன் : ராணுவ முத்திரையை பயன்படுத்தக் கூடாது என தோனிக்கு ஐசிசி தடை விதித்தாலும், அவரது ரசிகர்களுக்கு விதிக்க முடியுமா?

அந்த முத்திரை மூலம், தோனி ரசிகர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கெத்து காட்டியுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டிக்கு முன் தென்னாப்பிரிக்கா அணியை சந்தித்தது இந்தியா. அந்தப் போட்டியில் இருந்து தான் சர்ச்சை துவங்கியது.

தடை

தடை

தோனி பாலிடான் முத்திரை எனும் ராணுவ அடையாளம் கொண்ட விக்கெட் கீப்பிங் கிளவுஸ் அணிந்து அந்த போட்டியில் விளையாடினார். அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது. ஆனால், ஐசிசி அதற்கு தடை விதித்தது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஐசிசி விதித்த தடையை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் தோனி அந்த ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் அணிந்து தான் விளையாட வேண்டும் என இணையத்தில் பெருமளவில் கருத்து கூறி வந்தனர்.

ஐசிசி பிடிவாதம்

ஐசிசி பிடிவாதம்

பிசிசிஐ தன்னால் முயன்ற அளவுக்கு தோனி அந்த குறிப்பிட்ட கிளவுஸ் அணிந்து விளையாட முயற்சி செய்தது. ஐசிசிக்கு கடிதம் எழுதி, அனுமதி கேட்டும் பார்த்தது. எதற்கும் மசியவில்லை ஐசிசி.

ரசிகர்கள் கேள்வி

இதனால், வேறு வழியின்றி தோனி ராணுவ முத்திரை பதிக்காத கிளவுஸ் அணிந்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். சில ரசிகர்கள் என்ன நடந்தாலும், தோனி அவர் இஷ்டப்படி பாலிடான் முத்திரை கிளவுஸ் அணிந்து விளையாட வேண்டும் என்றனர். சிலர், தோனி அந்த முத்திரையை அணியாவிட்டாலும் ரசிகர்கள் பயன்படுத்தினால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர்.

ரசிகர்கள் முத்திரை

இது தான் தற்போது நடந்துள்ளது. சில ரசிகர்கள் குறிப்பிட்ட ராணுவ முத்திரையை பெரிய அளவில் அட்டையில் தயார் செய்து அதை போட்டியின் போது காட்டியபடி இருந்தனர். தோனியின் கிளவுஸ் சர்ச்சை பற்றி தெரியாதவர்கள் கூட இது என்ன என கேட்க ஆரம்பித்தார்கள்.

கலக்கல் ஆட்டம்

கலக்கல் ஆட்டம்

தோனிக்கு தடை போட்டாலும், அவர் ரசிகர்களை ஐசிசியால் தடுக்க முடியவில்லை. கில்லி போல சொன்னதை செய்து காட்டி விட்டார்கள் தோனி ரசிகர்கள். தோனியும் இந்தப் போட்டியிழ்க் கலக்கினார். கடைசி 5 ஓவர்களில் களமிறங்கிய தோனி அதிரடியாக ஆடினார். 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

Story first published: Sunday, June 9, 2019, 20:22 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+