For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எத்தனை பேர் இறங்குவாங்க.. என்ன பண்ணுவாங்கனு தெரியும்.. இந்திய அணி பற்றி புட்டு புட்டு வைத்த பாண்டிங்

Recommended Video

Cricket World cup 2019 : IND vs AUS: இந்திய அணி பற்றி புட்டு புட்டு வைத்த பாண்டிங்- வீடியோ

லண்டன் : இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் ஜூன் 9 அன்று ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது.

அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், இந்திய அணி என்ன திட்டத்தோடு வருவார்கள் என வரிசை போட்டு சொல்லி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

கடைசியாக வெற்றி

கடைசியாக வெற்றி

அடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணி, கடைசியாக நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தி இருந்தது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வார்னர் - ஸ்டீவன் ஸ்மித் அணியில் இடம் பெறவில்லை.

வலுவான ஆஸ்திரேலியா

வலுவான ஆஸ்திரேலியா

ஆனால், உலகக்கோப்பை அணியில் அவர்கள் இருவரும் இடம் பெற்றுள்ளனர். அதனால், ஆஸ்திரேலிய அணி வலுப் பெற்றுள்ளது. இந்த நிலையில், ரிக்கி பாண்டிங் உலகக்கோப்பை தொடருக்கு முன் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட, அந்த அணி முழுமையான அணியாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், பலமான அணிகளில் ஒன்றாக இருக்கும் இந்திய அணி, என்ன திட்டங்களோடு ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் என கூறினார்.

பும்ரா சிறப்பாக வீசுவார்

பும்ரா சிறப்பாக வீசுவார்

அவர் கூறுகையில், இந்திய அணியில் பும்ரா புதிய பந்தில் சிறப்பாக வீசுவார். சில பவுன்சர் மற்றும் யார்க்கர் வீசுவார். மற்றபடி புவனேஸ்வர் குமார், ஹர்திக் பண்டியா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்கள் என அசால்ட்டாக சொன்னார்.

மூன்று வேகம்

மூன்று வேகம்

அதன் பின், இந்திய அணி ஒரு சுழற் பந்துவீச்சாளர் மற்றும் பகுதி நேரமாக கேதார் ஜாதவ்வை வைத்துக் கொண்டு, மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தலாம். அப்படிப் பார்த்தால், பும்ரா, புவனேஸ்வர் குமாருடன், முகமது ஷமியும் ஆடுவார் என்கிறார் பாண்டிங்.

தயார்நிலை

தயார்நிலை

முகமது ஷமி, பும்ரா இருவரும் பவுன்சர் மற்றும் யார்க்கர் வீசி அச்சுறுத்துவார்கள் என்பதால், அதற்கேற்ப ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தயார் செய்து வருவதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

இந்தியா என்ன செய்யும்?

இந்தியா என்ன செய்யும்?

இந்திய அணியின் திட்டங்கள் குறித்து வரிசை கட்டி எதிரணியின் பயிற்சியாளரே கூறியுள்ளார். ஆனால், இந்திய அணி என்ன முடிவெடுக்கும் என்பது போட்டியின் போது தான் தெரியும். இந்திய அணியின் பலம் சுழற் பந்துவீச்சு தான். அதனால், இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர் பயன்படுத்துவது சந்தேகம் தான்.

Story first published: Saturday, June 8, 2019, 11:24 [IST]
Other articles published on Jun 8, 2019
English summary
IND vs AUS Cricket World cup 2019 : Ricky Ponting predicts India’s plan for next game
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+