Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டீவ் ஸ்மித்தை வைத்து.. விராட் கோலியின் ஈகோவை சீண்டி விட்ட ஆஸி. கேப்டன்.. பதிலடி கொடுப்பாரா கோலி?

லண்டன் : ஸ்டீவ் ஸ்மித்தை வைத்து, இந்திய கேப்டன் விராட் கோலியை சீண்டி விடும் வகையில் பேசியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்.

இன்று இந்தியா - ஆஸ்திரேலியா உலகக்கோப்பை லீக் போட்டி நடக்கவுள்ள நிலையில், போட்டிக்கு முன் விராட் கோலியை சீண்டி விட்டு வேடிக்கை பார்த்துள்ளார் ஆரோன் பின்ச்.

இது எப்படிப்பட்ட சீண்டல் என்றால், ஒரு இடத்தில் கூட விராட் கோலியை பற்றி பேசவில்லை. கோலி என்ற பெயரை கூட உச்சரிக்கவில்லை. ஸ்டீவ் ஸ்மித்தை பற்றி ஒரே ஒரு வரிதான் பேசினார். அதிலேயே எல்லாம் அடங்கிவிட்டது.

இந்தியா - ஆஸி. போட்டி

இந்தியா - ஆஸி. போட்டி

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகளில் இரண்டு போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஒன்று இந்தியா - பாகிஸ்தான். அடுத்தது இந்தியா - ஆஸ்திரேலியா. அந்தளவு இரு போட்டிகளும் சுவாரசியமாக இருக்கும்.

போட்டி போட்ட ஸ்மித்

போட்டி போட்ட ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் - டேவிட் வார்னர் பந்து சேத விவகாரத்தில் சிக்கி, ஓராண்டு தடையில் இருந்து மீண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். ஸ்டீவ் ஸ்மித் தடைக்கு முன் வரை, கிரிக்கெட் உலகில் விராட் கோலியால் எளிதாக புகழின் உச்சத்துக்கு செல்ல முடியவில்லை. அதற்கு காரணம், ஸ்டீவ் ஸ்மித்.

ஸ்மித் - விராட் கோலி

ஸ்மித் - விராட் கோலி

அப்போது ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியும், டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித்தும் பேட்டிங்கில் கோலோச்சி வந்தனர். அந்தந்த தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தனர். கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிக்கு தான் மரியாதை அதிகம். அதுதான் உண்மையான கிரிக்கெட் என்று கூறுகிறவர்களும் உண்டு.

ஓராண்டு தடை

ஓராண்டு தடை

அதனால், விராட் கோலி தான் தற்போது கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என எல்லோராலும் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தான் ஸ்டீவ் ஸ்மித் ஓராண்டு தடையில் சென்றார். அவர் தடையில், சென்ற பின் சில மாதங்கள் வரை விராட் கோலியால் டெஸ்ட் தரவரிசையில் அவரது முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை.

நம்பர் 1

நம்பர் 1

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ரன் குவித்துத் தள்ளிய கோலி, ஒரு வழியாக, டெஸ்ட் போட்டிகளிலும் தரவரிசையில் முதல் இடம் பிடித்து, ஒருநாள், டெஸ்ட் என இரண்டு கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பர் 1 என்ற என்ற இடத்தை அடைந்தார்.

தலைசிறந்த பேட்ஸ்மேன்

தலைசிறந்த பேட்ஸ்மேன்

இதைத் தொடர்ந்து, விராட் கோலி தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என கொண்டாடி வந்தது கிரிக்கெட் உலகம். பலரும் ஸ்டீவ் ஸ்மித்தை மறந்தும் விட்டனர். இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு மீண்டும் வந்தார் ஸ்டீவ் ஸ்மித்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்ந்த நிலையிலும், பொறுப்பாக ஆடி அணியை கரை சேர்த்து, தான் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என கிரிக்கெட் உலகிற்கு நினைவூட்டினார். ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்தியா அணியை சந்திக்கவுள்ளது.

கோலிக்கு திட்டம்

கோலிக்கு திட்டம்

இந்திய அணியில் விராட் கோலியை சீண்டி விட்டால் அவர் கோபத்தில் தவறு செய்வார் என்பது தான் காலம் காலமாக ஆஸ்திரேலியா வசம் இருக்கும் திட்டம். அதற்காக, கேப்டன் ஆரோன் பின்ச் அளித்த பேட்டியின் போது, "ஸ்டீவ் ஸ்மித் தான் மூன்று வித (டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன்" என கூறினார்.

சீண்டி விட்ட பின்ச்

சீண்டி விட்ட பின்ச்

இது நேரடியாக விராட் கோலியை குத்திக் காட்டுவது என்பது அனைவருக்கும் தெரியும். மிக நாசூக்காக, பெயரை சொல்லாமல் கோலியின் ஈகோவை சீண்டி விட்டுள்ளார் பின்ச். தற்போது போட்டியில் இதற்கான எதிர்வினை நடக்குமா? விராட் கோலி பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டுவாரா? அல்லது சதம் அடித்து பதிலடி கொடுப்பாரா?

Story first published: Sunday, June 9, 2019, 9:22 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+