Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குட்டிப் பயலே என்ன காரியம் பண்ணி வச்சுருக்க.. உறைந்து போய் நின்ற பும்ரா.. 2 ஓவரில் 32 ரன்

மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய வீரர் சாம் கோன்ஸ்டாஸ் ஆஸ்திரேலிய வீரர்களால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அதிரடி ஆட்டத்தை ஆடி மிரள வைத்து இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு எதிராக உலகின் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன் குவிக்க திணறி வரும் நிலையில் சாம் கோன்ஸ்டாஸ் ஒரு ஓவரில் 14 ரன்களும், மற்றொரு ஓவரில் 18 ரன்களும் சேர்த்து மிரள வைத்தார். அதிலும், அந்த இரண்டு ஓவர்களிலும் பும்ராவுக்கு எதிராக அவர் சிக்ஸ் அடித்தார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இதை அடுத்து பும்ரா சற்று பதற்றத்துடன் காணப்பட்டார். அந்த அளவுக்கு ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருந்தது. முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரராக இறங்கி இருந்த நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து துவக்கம் அளித்தார் சாம் கோன்ஸ்டாஸ். துவக்கம் முதலே ஸ்கூப் ஷாட்களை ஆட முயன்றார். முகமது சிராஜ் ஓவரில் சில முறை அதை செய்ய முயன்றார். ஆனால், அவரால் சரியாக ஸ்கூப் ஷாட்டை அடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், பும்ரா வீசிய 7வது ஓவரின் முதல் பந்தை ஸ்கூப் அடித்து ஃபோர் ஆக்கினார். இரண்டாவது பந்தில் ரிவர்ஸ் ஸ்கூப் அடித்து சிக்ஸ் அடித்தார். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் மீண்டும் ஒரு ஃபோர் அடித்தார். அடுத்து சில ஓவர்கள் நிதானமாக காத்து இருந்த அவர் மீண்டும் பும்ரா வீசிய 11 வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார்.

அந்த ஓவரில் முதல் பந்தில் போர் அடித்தார். நான்காவது பந்தில் ஒரு சிக்ஸ், ஐந்தாவது பந்தில் ஒரு ஃபோர் அடித்தார். இதன் மூலம் பும்ராவின் இரண்டு ஓவர்களில் மட்டும் 32 ரன்கள் சேர்த்து மிரள வைத்தார் சாம் கோன்ஸ்டாஸ். மேலும், 52 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

Story first published: Thursday, December 26, 2024, 6:37 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+