நாங்க எதுக்கும் தயார்.. இந்த மெசேஜ் ஆஸி.வுக்கு இல்லை.. வேற டீமுக்கு.. கிலியில் அந்த அணி!
மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு சிறப்பான ஆட்டம் ஆடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியில் ஆடும் வீரர்களை வைத்து ஒப்பிட்டால், இந்திய அணி பலம் குறைந்த அணி தான்.
ஆனாலும், இந்திய அணி வீரர்கள் கடும் குடைச்சலை கொடுத்து ஆஸ்திரேலிய வீரர்களை விரக்தியில் ஆழ்த்தி வருகிறார்கள்.

அந்த அணி
இந்தியா இப்படி அனுபவ வீரர்கள் இல்லாமலும் போர்க்குணத்தை வெளிப்படுத்தி இருப்பது ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் வேறு ஒரு அணிக்கு தான் கிலியை ஏற்படுத்தும். அந்த அணி இங்கிலாந்து. ஆம், அடுத்த மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வர உள்ளது.

குற்றச்சாட்டு
இந்திய டெஸ்ட் அணி பொதுவாக இரண்டும மூன்று வீரர்களை சார்ந்தே இருப்பதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், தற்போது அறிமுக வீரர்கள் கூட சிறப்பாக ஆடி வருகின்றனர். பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா, ஹனுமா விஹாரி என காயமடைந்த வீரர்களின் பட்டியல் மிகவும் நீளம்.

பெரிய தவறு
இவர்கள் இல்லாமல் டெஸ்ட் தொடரில் எளிதாக வெற்றி பெறலாம் என இங்கிலாந்து அணி நினைத்தால் அது பெரிய தவறு. காரணம், அந்த அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில், நடராஜன், முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், வாஷிங்க்டன் சுந்தர் என அனுபவமற்ற இளம் வீரர்கள் தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

வீழ்த்த முடியாது
எனவே, இந்திய அணி இரண்டு டெஸ்ட் அணிக்கான வீரர்களை கையில் வைத்துள்ளது என்பதை மனதில் கொண்டே இங்கிலாந்து அணி இந்தியா வரும். இந்த முறை காயடைந்த வீரர்களால் ஆட முடியாமல் போனாலும் இந்திய அணியை, இங்கிலாந்து அணியால் அத்தனை எளிதில் வீழ்த்த முடியாது.


Click it and Unblock the Notifications