Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நட்டுவை தவிர எல்லோருமே படுமோசம்.. சொதப்பிய இந்திய அணி.. ஆஸி. இமாலய இலக்கு!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் சொதப்பியது.

தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் மட்டுமே சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். 2 விக்கெட்களும் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்து மிரள வைத்தது. இந்திய அணியின் பீல்டிங்கும் மோசமாக அமைந்தது.

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

2வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் காயம் காரணமாக விலகிய நிலையில், மேத்யூ வேட் கேப்டன் பொறுப்பையும் ஏற்று, துவக்க வீரராக களமிறங்கினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

மேத்யூ வேட் துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினார். அவருடன் துவக்க வீரராக ஆடிய ஷார்ட் 9 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடினார். பின் வேகம் எடுத்தார்.

ஆஸ்திரேலியா ஸ்கோர்

ஆஸ்திரேலியா ஸ்கோர்

மேத்யூ வேட் 58, ஸ்டீவ் ஸ்மித் 46, மேக்ஸ்வெல் 22 ரன்கள் குவித்தனர். ஹென்ரிக்ஸ் 26 ரன்கள் எடுத்தார். ஸ்டோய்னிஸ் 16*, டேனியல் சாம்ஸ் 8* ரன்களும் எடுக்க ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

நடராஜன் அபாரம்

நடராஜன் அபாரம்

இந்திய அணியின் பந்துவீச்சில் நடராஜன் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். அவர் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி இறைத்தனர்.

வாரி இறைத்த பந்துவீச்சாளர்கள்

வாரி இறைத்த பந்துவீச்சாளர்கள்

தீபக் சாஹர் 48 ரன்களும், சாஹல் 51 ரன்களும் வாரி இறைத்து அதிர்ச்சி அளித்தனர். சுந்தர் 35 ரன்களும், தாக்குர் 39 ரன்களும் கொடுத்தனர். சாஹல் 1, நடராஜன் 2, ஷர்துல் தாக்குர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

பீல்டிங் மோசம்

பீல்டிங் மோசம்

இந்திய அணியின் பீல்டிங்கும் மோசமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா, கேப்டன் கோலி என நல்ல பீல்டர்களே பல கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர். கோலி கடந்த சில போட்டிகளாக பீல்டிங்கில் சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 6, 2020, 16:04 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+