
இந்தியா நம்பிக்கை
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 - 1 என சமநிலையில் உள்ளது. ரஹானே கேப்டன்சி இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில், இந்தியா அடுத்த இரு போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆஸி. தவிப்பு
மறுபுறம் ஆஸ்திரேலிய அணி சரியான துவக்க வீரர் கிடைக்காமலும், ஸ்டீவ் ஸ்மித்தின் பார்ம் அவுட் காரணமாகவும் தவித்து வருகிறது. இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது இந்த டெஸ்ட் தொடருக்கு பாதிப்பாக மாறி இருக்கிறது.

அதிக பாதிப்பு
மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள சிட்னியில் அதிக பாதிப்பு இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் போட்டியை நடத்த ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அதே சமயம், நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள பிரிஸ்பேனில் இரு அணி வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.

அழுத்தம்
சிலர் ஆஸ்திரேலிய அணியால் தொடரை வெல்ல முடியாது என்பதால் கடைசி டெஸ்டில் இந்திய அணிக்கு வெளியில் இருந்து மனதளவில் அழுத்தம் கொடுத்து போட்டியை வெல்லும் டெக்னிக் இது என குற்றம் சுமத்தி வருகின்றனர்.

உண்மையா?
ஆஸ்திரேலிய அணி கடந்த காலங்களில் இது போல வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கும் முறையை பின்பற்றிய அணி தான். ஆனால், கொரோனா வைரஸ் சமயத்திலும், அதை வைத்தே அந்த அணி அப்படி அழுத்தம் கொடுக்க நினைக்கிறதா? அல்லது உண்மையிலேயே நிலைமை மோசமாக இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications