For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS : என்ன அநியாயம் இது.. ஒரு ஓவருக்கு 2 பாலை காணோம்.. நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள்!

மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியை தொலைக்காட்சியில் கண்ட ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.

இந்த ஒருநாள் தொடர் இந்தியாவில் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் அதிக விளம்பரம் வருவதால் ரசிகர்கள் நொந்து போய் இருக்கின்றனர்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சிட்னியில் துவங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பந்து வீசியது.

ஆவல்

ஆவல்

இந்திய அணி சுமார் எட்டு மாதங்களுக்கு பின் ஆடும் சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால் ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆவலாக இருந்தனர். இந்தியாவில் சோனி டென் தொலைக்காட்சியில் நான்கு மொழிகளில் இந்தப் போட்டி ஒளிபரப்பானது.

விளம்பரம்

விளம்பரம்

போட்டியைக் காண தொலைக்காட்சி முன் அமர்ந்த ரசிகர்கள் சில ஓவர்களுக்கு பின் நொந்து போனார்கள். ஒவ்வொரு ஓவரிலும் ஒன்று அல்லது இரண்டு பந்துகளை ஒளிபரப்பாமல் விளம்பரம் ஒளிபரப்பியதாக குற்றம் சுமத்தினர் ரசிகர்கள்.

விமர்சனம்

விமர்சனம்

சிலர் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியுடன், சோனியை ஒப்பிட்டு விமர்சனம் செய்தனர். இதே போல போட்டிகள் நடந்தால் தொடரை பார்க்கவே முடியாது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

துவக்கம்

துவக்கம்

போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் - ஆரோன் பின்ச் நிலையான துவக்கம் அளித்தனர். அவர்கள் இருவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். 16 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்தது.

விக்கெட் வீழ்த்த முடியவில்லை

விக்கெட் வீழ்த்த முடியவில்லை

கேப்டன் விராட் கோலி பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தியும் விரைவில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஷமி, பும்ரா, சைனி, சாஹல், ஜடேஜா என ஐந்து பந்துவீச்சாளர்களாலும் முதல் 16 ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

Story first published: Friday, November 27, 2020, 10:59 [IST]
Other articles published on Nov 27, 2020
English summary
IND vs AUS : Fans disappointed over India - Australia series telecast in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+