IND vs AUS: அநியாயத்தின் உச்சம்.. சஞ்சு சாம்சனை நீக்கிய கம்பீர்..சுப்மன் கில்லுக்காக ஸ்பெஷல் ஏற்பாடு
ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. t20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு தொடக்க வீரராக இடம் வழங்கப்பட்டது.
அதில் அவர் சிறப்பாக பயன்படுத்தி சதம் சதமாக அடித்து வந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் கேப்டனாக கில் சிறப்பாக செயல்பட்டார் என்ற காரணத்திற்காக அவருக்கு மூன்று கிரிக்கெட் வடிவத்திலும் இடம் வழங்கப்பட்டது.

இதனால் கில்லுக்கு t20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர் என்ற இடம் கிடைத்தது. இதன் காரணமாக தொடக்க வீரர் என்ற இடத்தில் இருந்த சஞ்சு சாம்சன் நடு வரிசைக்கு தள்ளப்பட்டார். டாப் வரிசையில் விளையாடும் ஒரு வீரரை நடு வரிசையில் களமிறங்க அனுப்பினால் அவர் நிச்சயம் தருமாறுவார்.
அதையும் மீறி சஞ்சு சாம்சன் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை ஓரளவுக்கு பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனை காரணம் காட்டி அவரை அதிரடியாக தற்போது அணி நிர்வாகம் நீக்கி இருக்கிறது. இதற்கு பதில் நடுவரிசையில் களமிறங்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இனி தொடக்க வீரராக களமிறங்கும் சுப்மன் கில்லுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. நடுவரிசையில் வாய்ப்பு வழங்கினோம்.
அதை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற காரணம் காட்டி சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டிருக்கிறார்.
இதனால் நடுவரிசையில் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த ஜித்தேஷ் சர்மாவுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக கில் இனி சுதந்திரமாக தொடக்க வீரராக விளையாடலாம். எனினும் சஞ்சு சாம்சனின் விவகாரத்தில் இந்திய அணி அநியாயம் செய்திருப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு உள்ளனர்.
ஆசிய கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்பை ஒரு அளவுக்கு சிறப்பாகவே பயன்படுத்தியதாகவும், ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் ஒரே ஒரு போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கிவிட்டு அதில் அவர் சரியாக விளையாடவில்லை என்று கூறி நீக்கம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கில், நடப்பாண்டில் ஒரு டி20 போட்டியில் கூட அரை சதம் அடிக்கவில்லை. இதனால் அணியை விட்டு ஒரு வீரரை நீக்க வேண்டும் என்றால் அது கில் தான் என்றும் மாறாக சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் ரசிகர்கள் குறை கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications