Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இன்னும் இந்த வீக்னஸ் போகலயா? பயிற்சியில் விராட் கோலிக்கு ஏற்பட்ட சோகம்..ரசிகர்கள் கிண்டல்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். சுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

2027 உலக கோப்பையில் இந்த ஜோடி விளையாடுமா? இல்லை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது இந்த தொடர் முடிவில் தெரிய வந்துவிடும். இதனால் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக இருவரும் கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Virat kohli

மேலும் ஐபிஎல் தொடருக்குப் பிறகு இருவரும் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பது ஒரு பெரிய மைனசாக பார்க்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற இந்திய தொடரில் கூட இருவரும் பங்கு பெறவில்லை. இந்த நிலையில் பெர்த்தில் நடைபெற்ற வலைப்பயிற்சியின் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி வந்தார்.

ரோகித் சர்மாவும், விராட் கோலி பக்கத்து பக்கத்தில் நின்று கொண்டு பயிற்சி செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஆப் ஸ்டம்புக்கு வந்த பந்தை விராட் கோலி அடிக்காமல் விட்டுவிட்டார். அது ஆப் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் விராட் கோலி மிகவும் ஏமாற்றம் அடைந்து தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தினார்.

இதை அருகில் இருந்த ரோகித் சர்மா அதிர்ச்சியுடன் பார்த்தார். இதை தான் தற்போது ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். காரணம் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதேபோன்று ஒரு பந்தில் தான் விராட் கோலி ஆட்டம் இழந்து அதில் இந்தியா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

அதை ரீகிரேட் செய்யும் விதமாக விராட் கோலி பயிற்சியில் ஆட்டம் இழந்திருக்கிறார். இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் பலர் விராட் கோலியை கிண்டல் செய்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இதே போல் எப்படி அவுட் ஆகிறீர்கள். உங்களுக்கு இந்த வீக்னஸ் இன்னும் போகலையா என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அடிக்கடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Saturday, October 18, 2025, 15:10 [IST]
Other articles published on Oct 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+