Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கும் பேட்டிங் சுலபமாக இருக்காது.. நாங்களும் கஷ்டப்பட வேண்டும்.. ஸ்டார்க் கருத்து

அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 350 ,360 என்று இலக்கை எண்ணிக் கொண்டு காத்திருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இதற்கு காரணம் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்ததால்தான் இந்திய அணியால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி எளிதில் எட்டி விடுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு உள்ளது.

Ind vs aus final 2023 - Mitchell starc warns australia batsman as pitch is not easy to score

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கும் இது எளிதாக அமையாது. இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிச்சல் ஸ்டார்க்கை கூறி இருக்கிறார். இது பந்துவீச்சு முடிந்து வந்தவுடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நாங்கள் திட்டமிட்டு சரியாக செயல்பட்டோம். பந்துவீச்சில் எங்களுடைய பணி சிறப்பாக முடிந்தது.

தற்போது பேட்ஸ்மேன்கள் தங்களுடைய பணியை சரியாக செய்ய வேண்டும். வேக பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் எந்த ஒரு உதவியும் இல்லை. ஆனால் நாங்கள் பல வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டோம். பந்து வீசும் வேகத்தை அடிக்கடி மாற்றினோம். மேலும் ஹேசல்வுட்,கம்மின்ஸ் ரிவர்ஸ் ஸ்விங் செய்தனர். இந்த ஆடுகளம் மிகவும் தோய்வாக இருக்கிறது.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கும் இது சுலபமான இலக்காக இருக்காது. எங்களுடைய பேட்ஸ்மேன்களும் கஷ்டப்பட்டு ரன் சேர்க்க வேண்டும். பனிப்பொழிவு இருந்தால் பந்து கொஞ்சம் பேட்டிற்கு வரும். ஆனால் இது பேட்டிங் செய்ய சுலபமான ஆடுகளம் கிடையாது. பந்து புதிதாக இருக்கும் போது தான் அதை பயன்படுத்தி ரன்கள் சேர்க்க முடியும். பந்து பழையதாக மாறினால் ரன் சேர்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

இதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக தான் இருக்கும். இறுதி போட்டியில் நாம் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்று மிச்சல் ஸ்டார்க் கூறியுள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கும் இது சுலபமான இலக்காக இருக்காது என்று தெரிகிறது. மேலும் முதல் 10 ஓவரில் ஆஸ்திரேலியாவை குறைந்த ரன்களில் நாம் விக்கெட்டை வீழ்த்தினால் நிச்சயம் அது அந்த அணியை தடுமாற வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 19, 2023, 18:37 [IST]
Other articles published on Nov 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+