Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: நல்ல சமையல்காரரை டிரைவாக பணியமர்த்த முடியாது.. கம்பீருக்கு தமிழக வீரர் அறிவுரை

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இந்த போட்டியில் இந்திய அணி பவர்பிளேவில் நான்கு விக்கெட்டுகளை விழுந்தது. அப்போது வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை சிவம் துபேவுக்கு முன்பு களமிறக்கி கம்பீர் ஒரு முட்டாள்தனமான காரியத்தில் ஈடுபட்டார்.

எனினும் ஹர்ஷித் ராணா 35 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மிட்டார். எனினும் சிவம் துபே எட்டாவது வீரராக களம் இறங்கி வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Gambhir

இது குறித்து பேசிய அவர், நன்றாக சமைக்க தெரிந்த நபரை டிரைவராக பணியமர்த்த முடியாது. இதேபோல் நன்றாக கார் ஓட்டும் நபரை சமையல்காரர் ஆக பணி அமர்த்த முடியாது. எனவே பணி நிர்வாகம் ஒவ்வொரு வீரனின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும்.

ஒரு வீரரின் முக்கிய பணி என்ன அவர் அணிக்காக என்ன சிறந்ததை வெளிக்கொண்டு வருவார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வீரர் சில விஷயங்களை கூடுதலாக செய்வார் என்றால் அது நல்லது தான். அதற்காக அதை முக்கியமானதாக மாற்றி விடக்கூடாது. ஒரு பவுலருக்கு ஒரு அளவுக்கு பேட்டிங் செய்ய தெரியும் என்றால் அந்த பவுலரை பேட்ஸ்மேனாக பயன்படுத்தும் போக்கு இந்திய அணியில் அதிகரித்து வருகிறது.

ஒரு பவுலரின் அதி முக்கிய பணி அணிக்காக அபாரமாக பௌலிங் செய்ய வேண்டும். இதேபோன்று ஒரு பேட்ஸ்மேனின் முக்கிய பணி பேட்டிங்கை ரன்கள் சேர்க்க வேண்டும். எனவே இந்த விஷயத்தில் தெளிவான முடிவை அணி நிர்வாகம் எடுக்க வேண்டும். அந்த விஷயத்தில் இந்தியா தடுமாறி வருகிறது.

அது போல் பேட்டிங் வரிசையில் மியூசிக் சேர் ஆடும் விளையாட்டை இந்தியா நிறுத்த வேண்டும். இந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 160 முதல் 170 ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். சூரியகுமார் முதல் டி20 போட்டியில் மூன்றாவது வீரராக களம் இறங்கினார். ஆனால் நான்காவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் எதற்கு அனுப்பினீர்கள். சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கி ஐந்தாவது வீரராக தற்போது விளையாடுகிறார்.

தற்போது ஐந்தாவது வீரர்களுக்கு மூன்றாவது இடத்திற்கு ஏன் அனுப்புகிறீர்கள் ? இப்படி அடிக்கடி பேட்டிங் வரிசையை மாற்றினால் வீரர்களுக்கு தெளிவு கிடைக்காது. நம்பர் நான்காவது வீரராக திலக் வர்மா விளையாடி அணிக்கு ஆசிய கோப்பையில் வென்று தந்தார். அவரை எதற்கு ஐந்தாவது வீரராக களமிறங்குகிறார் என சடகோபன் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Story first published: Saturday, November 1, 2025, 12:42 [IST]
Other articles published on Nov 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+