Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இந்திய டி20 அணியில் பெரிய குழப்பம்.. யாரை தேர்வு செய்வது என்ற தலைவலியில் கம்பீர்

சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் புதன்கிழமை தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒரு நாள் தொடரில் இடம் பெற்ற கில், நிதீஷ்குமார் ரெட்டி, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் பலமே அதன் சுழற் பந்துவீச்சு தான்ம் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் இணைந்து 12 ஓவர்களை வீசி எதிரணியை கட்டுப்படுத்துவது வழக்கம். ஆனால் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையில்லாத ஒரு விஷயமாகும். இதனால் வேகப்பந்துவீச்சாளர்கள் நம்பி தான் அணியை கட்டமைக்க வேண்டும்.

Ind vs aus Gautam Gambhir

இதனால் யாரை தேர்வு செய்வது? யாரை விடுவது என்ற குழப்பத்தில் பயிற்சியாளர் கம்பீர் இருக்கின்றார்.
வருண் சக்கரவர்த்தி ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராக விளங்குகிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தன்னுடைய பேட்டிங்கை அக்சர் பட்டேல் நிரூபித்திருக்கிறார்.

இதனால் அவர் ஒரு ஆல்ரவுண்டராக அணியில் இடம் பெற வேண்டும். இப்படி இருக்கும்போது குல்தீப் யாதவ்க்கு அணியில் இடம் கிடைக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தி அசத்தினார். இதனால் அவரை அணியில் சேர்க்காமல் எப்படி விட முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒருவேளை மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை சேர்த்தால் அது ஆடுகளத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மேலும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் தான் இருப்பார்கள் என்ற நிலை ஏற்படும். இதனால் என்ன செய்யலாம் என்ற யோசனையில் கம்பீர் இருக்கின்றார். ஒருவேளை மூன்று சுழற்பந்துவீச்சாளர்களை சேர்த்தால், பவர் பிளேவில் வருண் சக்கரவர்த்தி பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் வீரர்களை கட்டுப்படுத்த முடியுமா என்ற யோசனையிலும் கம்பீர் இருக்கின்றார்.

Story first published: Monday, October 27, 2025, 17:48 [IST]
Other articles published on Oct 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+