Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: கம்பீர் செய்த தவறுகள்.. டி20 உலககோப்பையை மறந்து விடனும்.. நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ?

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. மேலும் இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.

கடைசியாக விளையாடிய ஒன்பது சர்வதேச t20 போட்டிகளில் கில், மொத்தமாகவே 169 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 24 என்ற அளவில் இருக்கின்றது. ஏற்கனவே வாய்ப்புக்காக ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

Gautam Gambhir

ஆனால் கில் தேவையில்லாமல் தொடக்க வீரராக கொண்டுவரப்பட்டு துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தபோது, கில்லில் பேட்டிங் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் டி20 கிரிக்கெடுக்கு ஒத்துவரவில்லை என்று கூறி தான் அவரை அணியை விட்டு நீக்கினார். ஆனால் தற்போது கம்பீர் தேவை இல்லாமல் டெஸ்ட் போட்டியில் கில் சிறப்பாக விளையாடினார் என்று பாராட்டி அவருக்கு டி20 போட்டியில் இடம் கொடுத்திருக்கின்றார்.

இந்தத் தொடர் முடிவடைந்த உடன் அடுத்த நான்கு நாட்களில் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கின்றது. இதனால் கில்லுக்கு கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்து தொடர்கள் விளையாடினால், அது அவருடைய பேட்டிங் தான் பாதிக்கும். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் எதையும் கிழிக்காத கில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடினால் அது மேலும் அவருடைய பார்மை பாதித்து கேப்டன்ஷிப்பையும் பாதிக்க வைக்கும்.

இதன் காரணமாக கில்லை டி20 கிரிக்கெட்டில் சேர்க்கக்கூடாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு பதில் சஞ்சு சாம்சனை தொடக்க வீரராகவும் அல்லது ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராகவும் சேர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய ஆர்ஸ்தீப் சிங் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானாவால் சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்சித் ஓவரரை நேற்று ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் ஆர்ஸ்தீப் சிங் என்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளரை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இப்படி நன்றாக இருந்த அணியை பயிற்சியாளர் கம்பீர் தேவை இல்லாமல் வீணடிப்பதாக ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.

Story first published: Saturday, November 1, 2025, 11:57 [IST]
Other articles published on Nov 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+