Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர் போட்ட தடைக்கு காரணம் இதுவாக தான் இருக்கும்.. முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி கருத்து

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் செயல்முறை குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். கம்பீர் பயிற்சியாளராக இருந்தபோது ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி சரியாக விளையாடவில்லை.

இனி அடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்களை இந்திய அணி நிர்வாகம் கொண்டு வந்தது. அதன்படி வெளிநாட்டு தொடரில் குடும்பத்தினர் வெறும் இரண்டு வாரங்கள் தான் தங்க வேண்டும் என்று ஒரு நடைமுறை கொண்டுவரப்பட்டது.

Gautam Gambhir

இது கோலி, ரோஹித் போன்ற வீரர்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஒரு சுற்றுப்பயணத்தின் போது அதிக அளவு கூட்டம் இருந்தால் நாம் எளிதாக கவனத்தை சிதற விட்டு விடுவோம்.

கம்பீர் பயிற்சியாளராக இருந்தபோது இது அவருடைய கையை மீறி சென்றிருக்கும் என்பதை அவர் உணர்ந்திருப்பார். இதனை அடுத்து தான் இப்படி ஒரு அளவுகோலை அவர் நிர்ணயித்திருப்பார் என்று என்னால் நம்ப முடிகிறது என்று கம்பீருக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து கில் கேப்டன்சி குறித்து பேசிய ரவி சாஸ்திரி, தற்போது நிலையான ஒரு அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது உண்மையிலேயே நல்ல விஷயம் தற்போது அவர் நல்ல மனநிலையில் பொறுமையான ஒரு வீரராக இருக்கின்றார்.

இதை அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியும் சிறந்த ஒரு கேப்டனாக கில் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது வீரர்களின் பயிற்சியாளராக விளங்கினார்.

எப்போது பயிற்சி செய்ய வேண்டும். வீரர்கள் யாருடன் இருக்க வேண்டும் என்று எந்த ஒரு விதிமுறைகளையும் அவர் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 23ஆம் தேதியும் மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

Story first published: Saturday, October 18, 2025, 16:13 [IST]
Other articles published on Oct 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+