சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இழந்த நிலையில் அணியில் பெரிய மாற்றத்தை எதுவும் செய்ய வேண்டாம் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முன்னால் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு இந்திய அணி t20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறது. 22 போட்டிகளில் 20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கம்பீர் பயிற்சியாளராக தடுமாறி வருகிறார்.

அண்மையில் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவில் வென்று அசத்திய நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சமன் செய்து இழந்த மானத்தைக் காப்பாற்றியது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் மூன்றாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், இந்திய அணி இரண்டு வித விதமான முடிவுகளை கம்பீர் வழிகாட்டுதலில் பெறுகிறது. ஒரு முடிவு அசுரத்தனமாக இருக்கின்றது, இன்னொரு முடிவு படு கேவலமாக அமைகிறது. இதனால் தான் நான் சொல்கின்றேன். அவசரத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கம்பீர் செய்யக்கூடாது.
சரியான காம்பினேஷனை அணியில் தேர்வு செய்ய வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து மண்ணில் நாம் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டோம். கில் மற்றும் பவுலர்கள் அனைவரும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்ட கில் அதன்பின் தனக்குத்தானே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படியெல்லாம் செய்யாமல் உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேருங்கள். குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் நன்றாகத்தான் விளையாடினார்.
ஆனால் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா போன்ற ஒரு பெரிய வீரரை மாற்றி கேப்டனாக பொறுப்பேற்று இருப்பதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். இதேபோல் ஜெய்ஸ்வால் ஏன் விளையாடவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். அதுவும் கில்லுக்க்ஹ் நெருக்கடியை ஏற்படுத்தும் இதையெல்லாம் அவர் மீண்டும் வருவார் ஏனென்றால் அவர் ஒரு சிறந்த வீரர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பெரிய ரண்களை குவிப்பார் என நம்புகிறேன் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.