Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி வீக்னஸ் தெரிஞ்சு போச்சு.. மண்டை பத்திரம்.. ஆஸி. வீரருக்கு பகிரங்க எச்சரிக்கை விட்ட ஜாம்பவான்!

சிட்னி : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பே இளம் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் இந்திய வீரரின் பந்துவீச்சால் தாக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக தேர்வாக வாய்ப்பு உள்ளவர் வில் புகோவ்ஸ்கி.

அவர் இதுவரை ஒன்பது முறையில் தலையில் பந்து தாக்கி மூளை அழற்சியில் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு டெஸ்ட் போட்டிக்கு முன்பே பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

வார்னர் - பர்ன்ஸ்

வார்னர் - பர்ன்ஸ்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சமீப காலங்களில் டேவிட் வார்னர் - ஜோ பர்ன்ஸ் துவக்க வீரராக ஆடி வருகின்றனர். ஆனாலும், இதில் ஜோ பர்ன்ஸ் இடம் நிரந்தரம் ஆகவில்லை. வில் புகோவ்ஸ்கி எனும் இளம் வீரரும் துவக்க வீரராக களமிறங்கும் போட்டியில் இருக்கிறார்.

பரிதாப புகோவ்ஸ்கி

பரிதாப புகோவ்ஸ்கி

தேர்வுக் குழு வில் புகோவ்ஸ்கியை ஆட வைக்க ஆர்வமாக இருந்தும் அவருடன் துவக்கம் அளித்து ஆட வேண்டிய மூத்த வீரர் டேவிட் வார்னர் அதை தவிர்க்க விரும்புகிறார். அவர் பேட்டிகளில் ஜோ பர்ன்ஸ் உடன் தான் நன்றாக ஆடி வரும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என கூறி உள்ளார்.

தேடி வந்த வாய்ப்பு

தேடி வந்த வாய்ப்பு

இந்த நிலையில், வில் புகோவ்ஸ்கிக்கு சிக்கலாக இருக்கும் டேவிட் வார்னர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆட மாட்டார் என்ற தகவல் வந்து சேர்ந்தது. அதன் மூலம், வில் புகோவ்ஸ்கி ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு தேடி வந்தது.

சொதப்பல்

சொதப்பல்

ஜோ பர்ன்ஸ் உடன், வில் புகோவ்ஸ்கி இணைந்து முதல் டெஸ்ட் போட்டியில் துவக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. பயிற்சிப் போட்டியில் இருவரும் இணைந்து துவக்கம் அளித்தனர். இருவருமே அதில் மோசமாக சொதப்பினர்.

தாக்குதல்

தாக்குதல்

இந்த நிலையில் பயிற்சிப் போட்டியில் இந்திய இளம் வேகப் பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி வீசிய பவுன்சர் பந்து வில் புகோவ்ஸ்கி தலையில் தாக்கியது. அவருக்கு மூளை அழற்சி ஏற்பட்டுள்ளது. இது போல் அவருக்கு தலையில் பந்து தாக்குவது இது முதல் முறையல்ல.

பலவீனம்

பலவீனம்

அவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமம் உள்ளது. அதன் காரணமாகவே அவரால் பவுன்சர் பந்துகளை அடிக்க முடியாமல் போகிறது, தலையில் பந்து தாக்குகிறது. இந்த பலவீனம் தற்போது இந்திய அணிக்கும் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

கவாஸ்கர் எச்சரிக்கை

கவாஸ்கர் எச்சரிக்கை

இந்த நிலையில் தான் வில் புகோவ்ஸ்கிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். வில் புகோவ்ஸ்கிக்கு இந்த பலவீனம் இருக்கிறது என்றால் நாட்டுக்காக ஆடினாலும், உள்ளூர் கிரிக்கெட், கிளப் கிரிக்கெட் ஆடினாலும் அவருக்கு அதிக பவுன்சர் பந்துகள் தான் வீசப்படும் என்றார்.

அதெல்லாம் மேட்டரே இல்லை

அதெல்லாம் மேட்டரே இல்லை

ஆனால், அவரது சக வீரர் பாட் கம்மின்ஸ் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இதையே தான் கேட்டு வருகிறார். ஆனால், உள்ளூர் தொடரில் அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்கள் அடித்துள்ளார். அதனால் இது பெரிய விஷயம் இல்லை. அவர் எப்படி பந்து வீசினாலும் சமாளிப்பார் என்றார்.

Story first published: Friday, December 11, 2020, 17:49 [IST]
Other articles published on Dec 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+