உங்களை நம்பி அணியில் எடுத்ததற்கு.. ஏமாற்றம் அளித்த வீரர்.. களத்தில் நடந்த ஷாக் சம்பவம்.. பின்னணி
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன் விஹாரி ஆடிய விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.
ஆனாலும் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி பவுலிங் சிறப்பாக இருந்தது .

எப்படி
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 195 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது.

இரண்டாவது நாள் ஆட்டம்
இரண்டாவது நாள் ஆட்டத்தில் இதுவே இந்தியா 4 விக்கெட்டை இழந்தாலும் கொஞ்சம் நன்றாகவே ஆடி உள்ளது. தற்போது வரை இந்திய அணி 161 ரன்கள் எடுத்துள்ளது. நேற்று மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார். இன்று புஜாரா 17, சுப்மான் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.

ஏமாற்றம்
ஆனால் இன்று ஹனுமா விஹாரி ஆடிய விதம்தான் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஹனுமா விஹாரி 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால் இன்று அவரின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. களத்தில் அவர் பேட்டிங் நின்ற விதம், பந்தை எதிர்கொண்ட விதம் எல்லாம் மிகவும் மோசமாக இருந்தது. ஹனுமா விஹாரி பேட்டிங் செய்த விதம் இன்று பெரிதும் அதிர்ச்சி அளித்தது.

திணறல்
முக்கியமாக பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஹனுமா விஹாரி கடுமையாக திணறினார். பந்தை இவரால் சரியாக கணிக்க முடியவில்லை. கொஞ்சம் இவர் கஷ்டப்பட்டு பேட்டிங் செய்தார் என்றுதான் கூற வேண்டும். பயிற்சி ஆட்டத்தில் ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் இவர் நன்றாக ஆடினார். மற்ற போட்டிகளில் சரியாக ஆடவில்லை.

கடந்த டெஸ்ட்
கடந்த டெஸ்ட் போட்டியிலும் ஹனுமா விஹாரி நன்றாக பேட்டிங் செய்யவில்லை . இவரின் பவுலிங் ஆப்ஷனுக்காக இந்திய அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் இவர் முதல் இன்னிங்சில் பவுலிங்கும் போடவில்லை. இதனால் அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications