DSP சிராஜை பார்த்து Head பயந்துட்டாரு! கைது செய்துவிடுவார் என்ற பயத்தில் சுமூக முடிவு- ஹர்பஜன் கேலி
மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும், அந்த அணி வீரர் ஹெட்டுக்கும், நமது முகமது சிராஜுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. டிராவிஸ் ஹெட் சதம் விளாசிய பிறகு அவருடைய விக்கெட்டை வீழ்த்திய பிறகு முகமது சிராஜை அவர் திட்டி இருக்கிறார்.
இதனால் சிராஜும் பதிலுக்கு டிராவிஸ் ஹெட்டை வெறுப்பேற்றும் வகையில் செயல்பட்டு இருக்கிறார். இதனால் சிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஹெட் தம்மை பார்த்து தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக சிராஜ் கூறியிருந்தார். இந்த தருணத்தில் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து சமாதானமாக போனார்கள். தாங்கள் இந்த விஷயத்தை முடித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றும் நாங்கள் இருவருமே நல்ல மனிதர்கள் என்பதால் இதை பெரிது படுத்த விரும்பவில்லை என்று டிராவிஸ் ஹெட் கூறி இருந்தார்.
இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் தான் முகமது சிராஜ் அண்மையில் தெலுங்கானா போலீசாரால் டிஎஸ்பி கௌரவ பதவி வழங்கப்பட்டது. இதனால் சிராஜை ரசிகர்கள் டி எஸ் பி என்று தான் அழைத்து வருகிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன், டிராவிஸ் ஹெட்க்கும் சிராஜுக்கும் மோதல் ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் சிராஜ் ஹைதராபாத்தில் பெரிய காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பதை ஹெட் அறிந்திருப்பார்.
இந்த சூழலில் எஸ் ஆர் ஹெச் அணிக்காக ஹெட் ஐதராபாத் வந்து விளையாடும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக டிஎஸ்பி சிராஜிடம் அவர் சமாதானமாக போய்விட்டதாக ஹர்பஜன் கிண்டல் அடித்திருக்கிறார். இதைப் போன்று பேசிய புஜாரா ஹெட்டுக்கு இந்திய வீரர்கள் அதிக அளவு ஷார்ட் பந்தை வீசவேண்டும் என்றும் அடுத்த முறை சிராஜ் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
Story first published: Monday, December 9, 2024, 17:26 [IST]
Other articles published on Dec 9, 2024


Click it and Unblock the Notifications