Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பாண்டியா, ஜடேஜா பார்ட்னர்ஷிப்.. மிரண்டு போன ஆஸி.!

கான்பெர்ரா : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசி சில ஓவர்களில் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

ஆஸ்திரேலிய அணி கடந்த இரு போட்டிகளில் 370, 380 ரன்களுக்கும் மேல் எடுத்த நிலையில், இந்த இலக்கு போதுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

துவக்கம்

துவக்கம்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பெர்ரா மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஷுப்மன் கில் - ஷிகர் தவான் துவக்கம் அளித்தனர்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

ஷிகர் தவான் 16, ஷுப்மன் கில் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கோலி நிலையாக ஆடினாலும், ஸ்ரேயாஸ் ஐயர் 19, கேஎல் ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கோலி அரைசதம் கடந்தார்.

கோலி 63 ரன்கள்

கோலி 63 ரன்கள்

விராட் கோலி 78 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா 33வது ஓவர் முதல் ஜோடி சேர்ந்து நிலையாக ரன் குவித்தனர். அவர்களை கடைசி வரை ஆஸ்திரேலிய அணியால் பிரிக்க முடியவில்லை.

பாண்டியா - ஜடேஜா ஜோடி

பாண்டியா - ஜடேஜா ஜோடி

இந்திய அணி ஒரு கட்டத்தில் ஓவருக்கு 5 ரன்கள் என்ற ரன் ரேட்டிலேயே ஆடி வந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பாண்டியா - ஜடேஜா ஜோடி 76 ரன்கள் குவித்தது. இதை ஆஸ்திரேலிய அணி எதிர்பார்க்கவில்லை, இதுவே போட்டியில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

பாண்டியா அபாரம்

பாண்டியா அபாரம்

ஹர்திக் பாண்டியா அரைசதம் கடந்து 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். 7 ஃபோர், 1 சிக்ஸ் அடித்தார். அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும் ஒருநாள் போட்டிகளில் தன் அதிகபட்ச ரன்களை எட்டினார். இதே தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் எடுத்த நிலையில், அதை முறியடித்து 92 ரன்கள் எட்டினார்.

ஜடேஜா மிரட்டல்

ஜடேஜா மிரட்டல்

ரவீந்திர ஜடேஜா 45வது ஓவர் வரை 35 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அதன் பின் அதிரடிக்கு மாறிய அவர் ஃபோர், சிக்ஸ் என மிரட்டினார். 50 பந்துகளில் அவர் 66 ரன்கள் குவித்தார். 5 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 303 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்து இந்திய அணி.

Story first published: Wednesday, December 2, 2020, 13:40 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+