Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: விமர்சனத்துக்கு பதிலடி தந்த ஹர்சித் ராணா.. ஆஸ்திரேலிய பேட்டிங்கை உடைத்த இந்திய அணி

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஹர்சித் ராணா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இதன் மூலம் இந்திய அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்து இருக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருக்கிறது. எனினும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்தியாவை ஆஸ்திரேலியா அணி ஒயிட்வாஷ் செய்தது கிடையாது.

Harshit rana

இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஸ் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதேபோன்று சிராஜ் பந்துவீச்சு டிராவிஸ் ஹெட் 29 ரன்களிலும் மேத்யூ ஷாட், வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் 30 ரன்கள் ஆட்டம் இழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ ரீன்சா அரை சதம் அடித்து அபாரமாக விளையாடும் நிலையில் 56 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதேபோன்று அலெக்ஸ் கெரி 24 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்ரேயாஸ் அபாரமான கேட்சால் பெவிலியன் திரும்பினார். கடந்த போட்டியில் இந்தியாவுக்கு வேட்டுவைத்த கூப்பர் கான்லி இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் ஆட்டமிழந்தார். இதுபோன்று மிட்செல் ஓவன், ஸ்டார்க் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற நாதன் எல்லீஸ் மட்டும் இறுதியில் 16 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பியதால் ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவரில் 236 ரன்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஹர்ஷித் ராணா 8.4 ஓவர் வீசி 39 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்ற மற்ற பௌலர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

Story first published: Saturday, October 25, 2025, 12:51 [IST]
Other articles published on Oct 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+