Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? எனக்கு ஆச்சரியமா இருக்கு- தினேஷ் கார்த்திக்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஹர்சித் ராணாவை நம்பர் எட்டாவது இடத்தில் பயன்படுத்த அணி நிர்வாகம் முயற்சி செய்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி எந்த வித மாற்றமும் செய்யாது என்றும் அவர் கூறியுள்ளார். என்னை கேட்டால் முதல் டி20 போட்டி சென்றவரை நன்றாக தான் இருந்தது. இதனால் பிளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றத்தையும் இந்திய அணி செய்யாது என நினைக்கிறேன்.

Harshit rana

நிதீஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரும் அணியில் இடம் பெற மாட்டார். இதனால் நம்பர் எட்டாவது வீரராக ஹர்ஷித் ராணாவை இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்த முடியும். ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை ஹேசல்வுட் இன்னும் ஒரு போட்டியில் விளையாடுவார். எனவே அவர்களுடைய அணியிலும் எந்த மாற்றமும் இருக்காது.

வேண்டுமானால் சேவியர் பார்ட்லெட்டை நீக்கிவிட்டு வேறு ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளரை அணிக்கு கொண்டு வரலாம். ஆனால் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் ஆஸ்திரேலியா அணியும் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது. ஒரு போட்டி முழுமையாக நடைபெறாத நிலையில் எந்த ஒரு வீரரையும் நீக்கினால் அது சரியான செய்தியை சொல்லாது.

இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் இந்திய அணியில் சூரியகுமார் அதிக ரன்கள் அடிப்பார்கள் என நான் நினைக்கின்றேன்.லக்னோவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சூரியகுமார் எங்களுக்கு எதிராக ஆடிய ஆட்டம் எனக்கு என்றும் நினைவில் இருக்கின்றது.

எனக்கு இந்த தரவரிசை எப்படி இயங்குகிறது என்று உண்மையிலேயே தெரியாது. ரோகித் சர்மா இப்போதுதான் நம்பர் ஒன் வீரராக மாறி இருக்கிறார் என்று கேட்கும் போது எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மட்டும் அவர் ஐந்து சதங்களை அடித்திருந்தார் என்று என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, October 30, 2025, 22:42 [IST]
Other articles published on Oct 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+