Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹெய்டன் எங்களுக்கு அருகில் கூட வரமாட்டார்.. விராட் கோலி அப்படி செய்திருக்க கூடாது.. பதான் கருத்து!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஜாம்பவான்களான ஹெய்டன், கில்கிறிஸ்ட் உள்ளிட்டோர் பின்னால் இருந்து கொண்டு ஸ்லெட்ஜிங் செய்வார்களே தவிர, ஒருபோதும் எங்களை நெருங்கி வரமாட்டார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ஆனால் விராட் கோலி 19 வயதேயான இளம் வீரரை தொட்டிருக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. இன்றைய நாளின் நட்சத்திர வீரராக ஆஸ்திரேலியா அணியால் அறிமுகம் செய்யப்பட்ட 19 வயதேயான சாம் கோன்ஸ்டாஸ் மாறியிருக்கிறார்.

ind vs aus virat kohli sam konstas vs


அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவை அதிரடியாக விளாசி இருக்கிறார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் பும்ராவின் பவுலிங்கில் சிக்சரை பறக்கவிட்டுள்ளார். சிறப்பாக ஆடிய அவர் 65 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு மெல்போர்ன் மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.

இதனிடையே சாம் கோன்ஸ்டாஸ்-ன் தோளில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி வேண்டுமென்றே இடித்து சென்ற சம்பவம் அரங்கேறியது. இதனால் இரு அணிகளின் ஜாம்பவான்களும் விராட் கோலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் தவறை ஒப்புக் கொண்ட விராட் கோலிக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பேசுகையில், கிரிக்கெட் களத்தில் எந்த சூழலிலும் எதிரணி வீரர்களை தொடவே கூடாது. களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு, சக வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். சாம் கோன்ஸ்டாஸ்-க்கு 19 வயது மட்டுமே ஆகிறது. ஹெய்டன், கில்கிறிஸ்ட் உள்ளிட்டோர் எங்களுக்கு 19 வயதாகிய போது, பின்னால் இருந்து கொண்டு வார்த்தைகளால் ஸ்லெட்ஜிங் செய்வார்கள்.

ஆனால் ஒருநாளும் எங்களை தொட்டதில்லை. அதனால் விராட் கோலி சாம் கோன்ஸ்டாஸ்-ன் தோளில் உரசியதை தவிர்த்திருக்க வேண்டும். எனக்கு ஒரு கேள்வியும் இருக்கிறது. ஒருவேளை விராட் கோலியின் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் இருந்து, சாம் கோன்ஸ்டான் இடத்தில் இந்திய அணியைச் சேர்ந்த 19 வயதான வீரரின் அறிமுகப் போட்டியில் இப்படியான சம்பவம் நிகழ்ந்திருந்தால் நாம் ஏற்போமா.. அப்படிதான் இதனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 26, 2024, 19:51 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+