Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- இந்த பையன் அடிக்கிற அடியில், ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் ஃபார்ம் அவுட் ஆகிவிடுவார்.. அபிஷேக் நாயர்

கான்பேரா: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் புதன்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1:45 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் 25 வயது வீரரான அபிஷேக் ஷர்மா அபாயகரமாக விளையாடுவார் என முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளரான அபிஷேக் நாயர் கணித்திருக்கிறார்.

இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டியில் தான் ஹேசல்வுட் விளையாடுவார். எஞ்சிய மூன்று போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அபிஷேக் நாயர், இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா இருக்கும் ஃபார்முக்கு அவர் ஹேசல்வுட் பந்துவீச்சை அடித்து ஆடினால் ஹேசல் வுட் அவுட் ஆப் மாறிவிடுவார்.

Abhishek

அவர் விளையாடும் விதத்தை பார்த்தால், முதல் பந்தில் இருந்தே பவுண்டரி சிக்ஸர்களை அடிப்பார். இதன் மூலம் எதிரணிக்கு பவர் பிளேவில் பயத்தை உண்டாக்க முடியும். அதுவும் இன்னிங்ஸ் முழுவதும் அபிஷேக் சர்மா அவ்வாறு அடித்தால், அது மிகப் பெரிய தாக்கத்தை போட்டியில் ஏற்படுத்தும்.

பவர் பிளேவில் அபிஷேக் ஷர்மா ஒரு ஆறு ஓவர் விளையாடினால் இந்திய அணி 60 ரன்களில் இருந்து 80 ரன்கள் வரை அடிக்கும். இதன் மூலம் மற்ற பேட்டர்களின் மீது இருக்கும் அழுத்தம் குறைந்துவிடும். மேலும் எதிரணிக்கு அழுத்தம் அதிகமாகிவிடும். ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக அபிஷேக் ஷர்மா விளையாடுகிறார். அதுவும் ஹேசல்வுட் எதிராக பந்தை எதிர்கொள்ளும் போது முதலில் அது ஒரு பெரிய பரிட்சை போல் தான் இருக்கும்.

ஏனென்றால் நல்ல பார்மில் இருக்கின்றார். மேலும் பந்தின் பவுன்சும் அவர் வீசும் போது நன்றாக இருக்கும். எனினும் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா மண்ணில் டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். எனவே இதை எதிர்கொள்ளும் அனுபவம் அவர்களுக்கு கிடைத்திருக்கும். அபிஷேக் சர்மாவுக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது.

மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் தனக்கென்று ஒரு பெயரை உருவாக்க அவர் நினைப்பார். இதற்கு நல்ல வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் மரியாதையை சம்பாதிக்க அபிஷேக் ஷர்மா முயற்சி செய்வார். அவரைப் பற்றி தெரிந்த வகையில் இதை நான் சொல்கின்றேன் என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, October 27, 2025, 23:05 [IST]
Other articles published on Oct 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+