Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி இனி எவ்வளவு ரன் அடிக்க வேண்டும்? ரோகித் படையை காப்பாற்றுமா மழை?

மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பென் நகரில் நடைபெறுகிறது.5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெறும் அணிக்கு தொடரை கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

அது மட்டும் அல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி யாருடைய தயவும் இன்றி செல்ல வேண்டுமென்றால், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆக வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே வெற்றி பெற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, எதிரணியை வெற்றி பெற விடாமல் செய்ய முடியும்.

ind vs aus virat kohli india vs australia gabba test vs

எந்த விளையாட்டிலும் இப்படி ஒரு வசதி கிடையாது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்ய வேண்டும் என்றால் முதலில் ஃபாலோ ஆணை தவிர்க்க வேண்டும். தற்போது பிரிஸ்பேன் நகரில் மழை அவ்வப்போது குறிக்கிட்டு வருகிறது. இதன் காரணமாக போட்டிப் பெருமளவு பாதிக்கப்படும் என தெரிகிறது.

இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்துள்ள நிலையில் இந்திய அணி பதிலுக்கு 25 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டு மதிய உணவு எடுக்கப்பட்டது.

இந்த சூழலில் மீண்டும் போட்டி தொடங்கியுள்ள நிலையில் மழை கண்ணாம் பூச்சி ஆட்டம் காண்பிக்கிறது. இதனால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்றால் எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்திய அணி 225 ரன்கள் எடுக்க வேண்டும். அவ்வாறு தாண்டிவிட்டால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக பேட்டிங் செய்து ஆக வேண்டும்.

இதன் மூலம் இந்தியா பேட்டிங் செய்ய குறைந்த நாளே கிடைக்கும். இதனால் இந்திய அணியின் முதல் குறிக்கோள் தற்போது 225 ரன்கள் எடுக்க வேண்டும். ஒருவேளை அந்த இலக்கை தாண்டிவிட்டால் முடிந்தவரை அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆஸ்திரேலியாவின் இலக்கிற்கு அருகில் செல்ல முயற்சி செய்ய வேண்டும். அது நடந்தால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியை சமன் செய்ய முடியும். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இந்தியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்த முயற்சி செய்யும். இதனால் மழை இந்திய அணி காப்பாற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Story first published: Monday, December 16, 2024, 9:18 [IST]
Other articles published on Dec 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+