Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லோரும் திட்டுனாங்க.. அந்த வீரரை நீக்கிய கோலி.. ஆனா காரணமே வேறு.. வெளியான உண்மை!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மனிஷ் பாண்டே அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெற்றார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்காதது விமர்சனத்துக்கு உள்ளானது.

இதை அடுத்தே இந்த மாற்றம் நடந்து இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், வேறு ஒரு காரணம் வெளியாகி உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்

ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்

ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றார். அந்த தொடரில் அவர் சொற்ப ரன்களே எடுத்ததால் அவரை முதல் டி20 போட்டியில் அணியில் இருந்து நீக்கி இருந்தார் கேப்டன் விராட் கோலி.

மனிஷ் பாண்டே சொதப்பல்

மனிஷ் பாண்டே சொதப்பல்

அவருக்கு பதில் மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை ஆட வைக்காதது குறித்த விவாதம் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் வெடித்தது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

கேப்டன் கோலி இஷ்டத்திற்கு அணியை மாற்றி வீரர்களின் நம்பிக்கையை உடைப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. சேவாக், கைஃப் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இது பற்றி பெரிய அளவில் விமர்சனம் செய்தனர்.

மீண்டும் சேர்ப்பு

மீண்டும் சேர்ப்பு

இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். மனிஷ் பாண்டே அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். இதற்கு கோலி மீதான விமர்சனம் தான் காரணம் என பேசப்பட்டது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

தற்போது இந்த மாற்றத்துக்கான உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது. மனிஷ் பாண்டேவுக்கு முட்டியில் வலி இருப்பதால் அவர் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, விமர்சனத்தை கண்டு ஸ்ரேயாஸ் ஐயருக்கு கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஷமி ஓய்வு

ஷமி ஓய்வு

மேலும், இந்தப் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாக்குர் அணியில் இடம் பிடித்தார். காயத்தால் தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜடேஜாவுக்கு பதில் சாஹல் அணியில் இடம் பிடித்தார். நடராஜன் இந்தப் போட்டியில் களமிறங்கினார்.

Story first published: Sunday, December 6, 2020, 14:55 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+