Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே மேட்ச்தான்.. முக்கிய தலைகளை சாய்த்த நடராஜன்.. டி20யிலும் வாய்ப்பு.. என்ன நடந்தது?

கான்பெர்ரா : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டி20 போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரில் ஆடி வருகிறது இந்திய அணி. கேப்டன் கோலி முதல் டி20 போட்டியில் நடராஜனை தேர்வு செய்து ஆட வைத்தார்.

அறிமுகம்

அறிமுகம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கான்பெர்ராவில் நடைபெற்றது. முதல் போட்டியில் தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் பெற்றார். அவர் இரண்டு நாட்கள் முன்பு தான் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தார்.

எப்படி?

எப்படி?

அடுத்ததாக டி20யிலும் அறிமுகமாகி அசத்தி உள்ளார். அவருக்கு எப்படி அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது? நடராஜன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து கூடுதல் வீரராக இருந்தவரை இந்திய டி20 அணியில் சேர்த்தது பிசிசிஐ.

வாய்ப்பு

வாய்ப்பு

இதனிடையே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் சேர்க்கப்பட்டார், அவருக்கு மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் தன் யார்க்கர் பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலிய அணியை ஆட்டம் காண வைத்தார்.

கவனத்தை ஈர்த்தார்

கவனத்தை ஈர்த்தார்

இரண்டு முக்கிய விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். இரண்டு ஓவர்களில் மட்டும் கூடுதல் ரன்கள் கொடுத்தாலும் மற்ற ஓவர்களில் கட்டுக் கோப்பாக வீசி இருந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடராஜன்.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

இந்த நிலையில், அவரது பந்துவீச்சின் தாக்கத்தை உணர்ந்த கேப்டன் விராட் கோலி அவரை டி20 அணியிலும் அறிமுகம் செய்துள்ளார். இதில் மற்றொரு விஷயமும் உள்ளது. ஒருநாள் தொடரை இந்திய அணி இழக்க முக்கிய காரணமே மோசமான பந்துவீச்சு தான்.

பவர்பிளே

பவர்பிளே

நவ்தீப் சைனி, பும்ரா, ஷமி என மூவருமே அதிக ரன்களை வாரி இறைத்தனர். இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் ஆட வைக்கப்பட்டார். அவர் அந்தப் போட்டியில் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டார்.

நம்பிக்கை

நம்பிக்கை

அவரை பின்னரே இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக மாறியது. வெற்றியும் கிடைத்தது. அவர் மீது கேப்டன் விராட் கோலி ஒரே போட்டியில் பெரிய நம்பிக்கையை பெற்றார். ஆஸ்திரேலிய தொடர் துவங்கும் முன் பயிற்சியில் இருந்தே நடராஜன் இந்திய அணி நிர்வாகத்தை ஈர்த்து வந்தார்.

சாய்த்தார்

சாய்த்தார்

கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவரை உற்று நோக்கி வந்தனர். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தன் முதல் சர்வதேச போட்டியில் செயல்பட்டு அவர்களை தன் பக்கம் சாய்த்துள்ளார் நடராஜன். இதை அடுத்தே டி20 அணியிலும் அவர் வாய்ப்பு பெற்றுள்ளார்.

Story first published: Friday, December 4, 2020, 15:26 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+