Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: புஜாரா ஃபார்முலா தான் சரி.. இந்திய பவுலர்களுக்கு பதிலடி கொடுப்பேன்.. சபதம் போட்ட லபுஷேன்

பெர்த்: இந்திய அணியின் அனுபவ வீரரான புஜாராவை போல் நீண்ட நேரம் பேட்டிங் செய்து இந்திய அணியின் பவுலர்களை சோர்வடைய வைப்பதே திட்டம் என்று ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.

2018-19 மற்றும் 2020-21 ஆகிய 2 முறையும் ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு அனுபவ வீரரான புஜாரா முக்கியமான காரணம். 2018-19 சீசனில் ஆஸ்திரேலியா மண்ணில் 1,258 பந்துகளையும், 2020-21 சீசனில் 928 பந்துகளையும் புஜாரா சந்தித்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் பவுலர்கள் கூடுதலாக களைப்படைந்தனர்.

ind vs aus shubman gill nitish kumar reddy

2020-21 சீசனில் புஜாராவை விடவும் ஆஸ்திரேலியா அணியின் மார்னஸ் லபுஷேன் கூடுதலாக 155 ரன்களை சேர்த்தார். ஆனால் பந்துகளின் எண்ணிக்கையில் 78 பந்துகளை குறைவாகவே சந்தித்திருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் புஜாராவின் டெக்னிக்கை இந்திய அணியிடமே காட்ட ஆஸ்திரேலியா அணியின் லபுஷேன் இம்முறை திட்டமிட்டுள்ளார்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் போது இயற்கையாகவே பவுலர்கள் களைப்படைந்துவிடுவார்கள். இதுகுறித்து லபுஷேன் பேசுகையில், எந்தவொரு பவுலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஸ்பெல்லை வீசும் உற்சாகமாக பவுலிங் செய்வார்கள். ஆனால் 2வது மற்றும் 3வது ஸ்பெல்லில் தான் பேட்ஸ்மேன்கள் அந்த பவுலருக்கு அழுத்தத்தை திருப்பி கொடுக்க முடியும்.

அதிலும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு பின் கடைசி 3 போட்டிகளை விளையாடுவது எளிதாக இருக்காது. ஏனென்றால் அதே பவுலர்கள் 100, 150, 200 ஓவர்களை வீசும் போது, இந்த டெஸ்ட் தொடரின் வெற்றியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் இம்முறை புஜாராவை போல் நீண்ட இன்னிங்ஸை விளையாடுவதே திட்டம். புஜாரா எங்கள் பவுலர்களை களைப்படைய வைத்ததை போல், இந்திய பவுலர்களுக்கு பதிலடி கொடுப்பேன்.

பெர்த் மைதானத்தை பொறுத்தவரை பிட்சின் சில பகுதிகளில் தொடக்கம் முதலே பவுலிங் செய்து அட்டாக் செய்வார்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால் பெர்த் மைதானத்தில் கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். அந்த பகுதிகளில் பவுலிங் செய்யும் போது பேட்ஸ்மேன்களை எளிதாக எட்ஜ் எடுக்க முடியும். ஆனால் அதுபோன்ற பந்துகளை எதிர்கொள்ளாமல் தவிர்க்க முயற்சிகள் எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

பெர்த் மைதானத்தை பொறுத்தவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள லபுஷேன், 3 சதங்களை விளாசி இருக்கிறார். மொத்தமாக 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 519 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமல்லாமல் லபுஷேன் விக்கெட்டை வீழ்த்துவதும் இந்திய அணிக்கு எளிதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, November 21, 2024, 8:15 [IST]
Other articles published on Nov 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+