Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டனாக இருக்கவே பிறந்தவர்.. விராட் கோலி இல்லை.. அந்த இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய ஆஸி. ஜாம்பவான்!

சிட்னி : தைரியசாலி, சாமர்த்தியசாலி, கிரிக்கெட் அணிகளை வழிநடத்தவே பிறந்தவர்.. இப்படி எல்லாம் இந்திய கேப்டனை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் ஆஸ்திரேலிய ஜாம்பவான் இயான் சாப்பல்.

இந்த வார்த்தைகள் எதுவுமே விராட் கோலியை பற்றி அவர் சொன்னவை அல்ல என்பது தான் இதில் முக்கியமானது.

இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வரும் அஜின்க்யா ரஹானேவைப் பற்றித்தான் இப்படி புகழ்ந்து தள்ளி இருக்கிறார் இயான் சாப்பல்.

கேப்டன் ஆன ரஹானே

கேப்டன் ஆன ரஹானே

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் மோதி வருகிறது. முதல் டெஸ்டில் மட்டுமே கேப்டன் விராட் கோலி பங்கேற்றார். அதன் பின் அவர் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றார். அவருக்கு பதில் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

புகழ்ந்த ஆஸி. வீரர்கள்

புகழ்ந்த ஆஸி. வீரர்கள்

முதல் டெஸ்டில் கோலி தலைமையில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையில் அசத்தலாக வென்றது. பலரும் ரஹானேவின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளினர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் அவரை குறிப்பிட்டு பாராட்டினர்.

உதாரணம்

உதாரணம்

முன்னாள் வீரர் இயான் சாப்பல், ரஹானே குறித்து கூறுகையில், அவர் இதற்கு முன் 2017இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கேப்டனாக செயல்பட்ட போட்டியை குறிப்பிட்டு உதாரணம் கூறி பாராட்டினார். கேப்டனாகவே இருக்கவே பிறந்தவர் என அவர் உச்சகட்டமாக புகழ்ந்தார்.

ஆச்சரியமாக இருக்காது

ஆச்சரியமாக இருக்காது

2017இல் தரம்சாலா டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டனாக செயல்பட்டதை பார்த்த அனைவர்க்கும் ரஹானே தவறே இல்லாமல் மெல்போர்ன் போட்டியில் கேப்டனாக செயல்பட்டது ஆச்சரியமாக இருக்காது என்றார். அந்தப் போட்டியில் தன்னை ஈர்த்த சம்பவம் பற்றியும் சாப்பல் கூறினார்.

அந்த திருப்பம்

அந்த திருப்பம்

தரம்சாலா போட்டியில் டேவிட் வார்னர் - ஸ்டீவ் ஸ்மித் 100 ரன்களுக்கும் மேல் கூட்டணி அமைத்து இருந்தனர். அப்போது அறிமுக வீரரான குல்தீப் யாதவ்வை நம்பி பந்தை கொடுத்தார். அது தைரியமான முடிவு என நான் நினைத்தேன். அப்போது வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் என்றார்.

அமைதி

அமைதி

அதன் பின் ஆஸ்திரேலியா 5 விக்கெட்களை விரைவாக இழந்தது. அது கேப்டனாக ரஹானேவின் வெற்றி. அவர் தைரியமானவர், சாமர்த்தியமானவர். ஒரு தலைவராக அவருக்கு இந்த இரண்டை தாண்டியும் அவரிடம் சில குணங்கள் உள்ளது. அவர் மோசமான சூழலில் அமைதியாக இருக்கிறார் என்றார் சாப்பல்.

Story first published: Sunday, January 3, 2021, 13:54 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+