2 மாதங்கள் முழு ஃபிட்னஸ் உடன் இருங்க.. பிறகு பார்க்கலாம்.. முகமது ஷமிக்கு அஜித் அகர்கர் பதில்!
மும்பை: அடுத்த 2 மாதங்கள் முகமது ஷமி முழுமையான ஃபிட்னஸ் உடன் இருந்தால், நிச்சயமாக அவரின் கதை மாறிவிடும் என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். முகமது ஷமி முழு ஃபிட்னஸ் உடன் இருக்கிறேன் என்று என்னிடம் தெரிவித்தால், நிச்சயமாக அவருக்கு நேரடியாக பதில் அளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. முகமது ஷமிக்கு ஃபிட்னஸ் பிரச்சனை இருப்பதால், அவர் ஆஸ்திரேலியா செல்லவில்லை என்று அஜித் அகர்கர் கூறி இருந்தார். இந்த சூழலில் ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக முகமது ஷமி விளையாடி வருகிறார்.

உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி அசத்தி இருந்தார். சுமார் 15 ஓவர்களை வீசிய அவர், முழு ஃபிட்னஸ் உடன் காணப்பட்டார். இதன்பின் முகமது ஷமி பேசுகையில், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது எனது கைகளில் இல்லை. எனக்கு ஃபிட்னஸ் பிரச்சனை இருந்தால், பெங்கால் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்க முடியாது.
இதுதொடர்பாக பேசி புதிய சர்ச்சையை உருவாக்கவில்லை. என்னால் 4 நாட்கள் விளையாடப்படும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட முடியும் என்றால், ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அகர்கர், ஒருவேளை முகமது ஷமி நேரடியாக என்னிடம் அப்படி கூறினால், நிச்சயமாக பதில் அளிப்பேன்.
ஒருவேளை முகமது ஷமி சொன்னதை நான் படித்திருந்தால், அவரிடம் செல்ஃபோனில் பேசுவேன். ஏனென்றால் கடந்த சில மாதங்களில் ஏராளமான முறை அவருடன் பேசியுள்ளேன். உண்மையாகவே அவர் சொல்லி இருந்தால், ஷமியுடன் பேசுவதற்கான நேரம் வந்துவிட்டது. முகமது ஷமி ஃபிட்னஸ் உடன் இருந்திருந்தால், அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கே பயணம் செய்திருப்பார்.
தற்போது உள்நாட்டு கிரிக்கெட் தொடர் தொடங்கி இருக்கிறது. அவர் முழு ஃபிட்னஸ் உடன் இருக்கிறாரா என்பதை பார்ப்போம். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முகமது ஷமியை சேர்க்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் அவர் ஃபிட்னஸ் உடன் இல்லை. அடுத்த 2 மாதங்கள் அவர் ஃபிட்னஸ் உடன் இருந்தால், அவரின் கிரிக்கெட் வாழ்க்கையே மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications