Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறிக்க விட்ட பாண்டியா.. போராடிய நடராஜன்.. ஆஸி. வீழ்த்திய இந்திய அணி!

சிட்னி : இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா தன் அதிரடி ஆட்டம் மூலம் கடைசி ஓவரில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

பந்துவீச்சில் நடராஜன் தனி ஆளாக ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்த போராடினார்,

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரின் இரண்டாவது போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 194 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தற்காலிக கேப்டன் மேத்யூ வேட் 58, ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் குவித்தனர்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

இந்திய அணியின் பந்துவீச்சில் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர் 48 ரன்களும், சாஹல் 51 ரன்களும் கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். தாக்குர், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

சேஸிங்

சேஸிங்

அடுத்து இந்திய அணி சேஸிங் செய்யத் துவங்கியது. கேஎல் ராகுல் 30, தவான் 52, விராட் கோலி 40 ரன்கள் குவித்தனர். சஞ்சு சாம்சன் 15 ரன்கள் எடுத்தார். கடைசி 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் இருந்தனர்.

14 ரன்கள் தேவை

14 ரன்கள் தேவை

இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டு சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார் பாண்டியா. அவர் 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இருந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 5 பந்துகளில் 12 ரன்கள் குவித்து இருந்தார்.

டி20 தொடர்

டி20 தொடர்

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. மேலும், டி20 தொடரை 2 - 0 என கைப்பற்றி ஒருநாள் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி. இது இந்திய அணி தொடர்ந்து பெரும் 9 வது டி20 போட்டி வெற்றி ஆகும்.

Story first published: Sunday, December 6, 2020, 18:19 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+