Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஹல் தந்த திருப்பம்.. தெறிக்கவிட்ட யார்க்கர் நட்டி.. முட்டி மோதி தோல்வி அடைந்த ஆஸி.!

சாஹல் தந்த திருப்பம்.. தெறிக்கவிட்ட 2 தமிழக வீரர்கள்.. முட்டி மோதி தோல்வி அடைந்த ஆஸி.!

கான்பெர்ரா : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 161 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் நடராஜன், சாஹல் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம் ஆனார்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்திய அணியின் பேட்டிங்கில் கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஜடேஜா மட்டுமே ரன் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். கேஎல் ராகுல் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆடி 15 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

ஜடேஜா கடைசி இரு ஓவர்களில் அதிரடியாக ஆடி மிரட்டினார். அவர் 23 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயம் செய்தது.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

ஆஸ்திரேலிய அணி சிறப்பான துவக்கம் பெற்றது. ஆரோன் பின்ச் 35, டிஆர்சி ஷார்ட் 34 ரன்கள் எடுத்தனர். இதில் ஷார்ட் நிதான ஆட்டம் ஆடினார். 38 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இருந்தார். அவரது நிதான ஆட்டம் ஆஸ்திரேலிய அணியை பாதித்தது.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

ஸ்டீவ் ஸ்மித் 12, மேக்ஸ்வெல் 2, மேத்யூ வேட் 7 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். ஹென்ரிக்ஸ் போராடி 20 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். எனினும், சாஹல், நடராஜன் தொடர்ந்து விக்கெட் வேட்டை நடத்தியதால் ஆஸ்திரேலிய அணி 18வது ஓவரில் அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களையும் இழந்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடராஜன் பந்துவீச்சில் ஷார்ட், மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஆட்டமிழந்தனர். சாஹல் பந்துவீச்சில் பின்ச், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட் ஆட்டமிழந்தனர். சாஹர் ஹென்ரிக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

Story first published: Friday, December 4, 2020, 19:34 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+