Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் வென்ற கோலி.. கேப்டனை மாற்றிய ஆஸி.. மனிஷ் பாண்டே நீக்கம்.. 2வது டி20யில் எதிர்பார்க்காத மாற்றம்!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன டி20 தொடரின் இரண்டாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரோன் பின்ச் காயத்தால் விலகி உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் செயல்பட்டு வருகிறார்.

இந்திய அணியில் மனிஷ் பாண்டே நீக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம்

காயம்

முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த அணியில் துரதிர்ஷ்டவசமாக மூன்று முக்கிய வீரர்கள் காயம் மற்றும் சொந்த காரணங்கள் காரணமாக விலகினர்.

கேப்டன் மாற்றம்

கேப்டன் மாற்றம்

கேப்டன் ஆரோன் பின்ச் காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதில் மேத்யூ வேட் கேப்டன் பொறுப்பை ஏற்று துவக்க வீரராகவும் களமிறங்கினார். மிட்செல் ஸ்டார்க் சொந்த காரணம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். ஹேசல்வுட் காயம் காரணமாக நீக்கப்பட்டார்.

மனிஷ் பாண்டே நீக்கம்

மனிஷ் பாண்டே நீக்கம்

இந்திய அணியில் காயமடைந்த ஜடேஜாவுக்கு பதில் சாஹல் அணியில் இடம் பிடித்தார். முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷர்துல் தாக்குர் அணியில் இடம் பிடித்தார். மனிஷ் பாண்டே காயம் காரணமாக நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பிடித்தார்.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணி விவரம் - கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்குர், தீபக் சாஹர், டி நடராஜன், யுஸ்வேந்திர சாஹல்

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி விவரம் - டி ஆர்சி ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மத்தேயு வேட், டேனியல் சாம்ஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்வெப்சன், ஆடம் ஜாம்பா, ஆண்ட்ரூ டை

Story first published: Sunday, December 6, 2020, 13:59 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+