Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

11/4.. சொதப்பிய ராகுல், ருதுராஜ், அபிமன்யூ, சாய் சுதர்சன்.. இந்தியா ஏ அணியை பொளந்த ஆஸ்திரேலியா ஏ!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ள இந்தியா ஏ அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. இந்தியா ஏ அணியின் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட கேஎல் ராகுல், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய 4 வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றியுள்ளனர்.

ஆஸ்திரேலியா ஏ அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா ஏ அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி தோல்வியடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்தியா ஏ அணியுடன் சீனியர் வீரரான கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜுரெல் இணைந்தனர்.

ind a vs aus a kl rahul ruturaj gaikwad

பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பயிற்சியாக அமையும் வகையில் கேஎல் ராகுல் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணியின் கேப்டன் மெக்ஸ்வீனி பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் இந்தியா ஏ அணி தரப்பில் கேஎல் ராகுல் - அபிமன்யூ ஈஸ்வரன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

மைக்கில் நெசர் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே அபிமன்யூ ஈஸ்வரன் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சாய் சுதர்சன் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி ரன் ஏதும் எடுக்காமலேயே 2 விக்கெட்டுகளை பறி கொடுத்தது. பின்னர் போலாந்த் வீசிய 2வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் 4 ரன்களிலும், 3வது ஓவரில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்தியா ஏ அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட அபிமன்யூ ஈஸ்வரன் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அவர் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய நிலையில், 2வது போட்டியில் கேஎல் ராகுலை தொடக்க வீரராக களமிறக்கி புதிய திட்டத்தை பிசிசிஐ அரங்கேற்றியது. அவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்திருப்பது இந்திய அணி நிர்வாகத்தை உலுக்கியுள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் எந்த வீரர் தொடக்கம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, November 7, 2024, 7:53 [IST]
Other articles published on Nov 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+