Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது டெஸ்ட்.. அதிரடி காட்டும் ஆஸி பவுலிங்.. இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்.. களத்தில் என்ன நடக்கிறது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 195 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது.

முதல் நாள் முழுக்க களத்தில் இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

முதல் நாள் போட்டியில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அஸ்வின் 3 விக்கெட் எடுக்க, இன்னொரு பக்கம் பும்ரா 4 விக்கெட் எடுத்தார். அறிமுக வீரர் சிராஜும் 2 விக்கெட் எடுக்க ஜடேஜா கடைசி விக்கெட்டை எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா கடுமையாகி திணறியது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

மிக மோசமாக திணறிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 195 ரன்கள் எடுத்தது. இதன்பின் இறங்கிய இந்திய அணி நிதானம் காட்டியது. முதல் நாளே மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம்

இரண்டாம் நாள் ஆட்டம்

இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. தற்போது வரை இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 80 ரன்களை எடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி சில மணி நேரங்களில் புஜாரா 17 ரன்கள் இருக்கும் போது அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் இதுவரை சிறப்பாக அமைந்துள்ளது.

அவுட்

அவுட்

அதன்பின் நன்றாக ஆடி வந்த சுப்மான் கில் 45 ரன்களுக்கு அவுட் ஆனார். தற்போது இந்திய பேட்ஸ்மேன்கள் ரஹானே, ஹனுமா விஹாரி ஆடி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Story first published: Sunday, December 27, 2020, 6:51 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+