இன்னும் ஒரு நாள் தான்.. பந்தாடிய இந்தியா.. ஆஸி. சரண்டர்.. 2வது டெஸ்ட்!
மெல்போர்ன் : இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 6 விக்கெட் இழந்து தவித்து வருகிறது.
இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை சுருட்டியது. நான்காம் நாளில் போட்டி முடிவுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.

முதல் இன்னிங்க்ஸ்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளன. முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாம் டெஸ்டில் வெற்றி பெறும் முனைப்பில் ஆடி வருகிறது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்க்ஸில் 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா ஸ்கோர்
அடுத்து ஆடிய இந்திய அணி 326 ரன்கள் குவித்தது. ரஹானே 112, ஜடேஜா 57 ரன்கள் குவித்து அசத்தலாக ஆடி இருந்தனர். 131 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி இரண்டாம இன்னிங்க்ஸில் பந்து வீசத் துவங்கியது. ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்க்ஸிலும் தடுமாறியது.

ஆஸ்திரேலியா பேட்டிங்
மேத்யூ வேட் 40, லாபுஷாக்னே 28 ரன்கள் எடுத்தது மட்டுமே அந்த அணி வீரர்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள்,. ஸ்டீவ் ஸ்மித் உட்பட மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா மூன்றாம் நாள் முடிவில் 133 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்து வருகிறது.

வெற்றி வாய்ப்பு
களத்தில் கேமரூன் கிரீன் 17 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 15 ரன்களுடனும் உள்ளனர். நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 200 ரன்களுக்குள் சுருட்டினால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications