Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10வது முறையாக நடந்த சம்பவம்.. ஆஸ்திரேலியா தோல்வியடைந்த வரலாறே கிடையாது.. இந்திய அணிக்கு ஆப்பு உறுதி!

மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான சாம் கோன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் விளாசி இருக்கின்றனர். இதற்கு முன் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக 9 முறை இரு தொடக்க வீரர்களும் அரைசதம் அடித்துள்ள நிலையில், அவற்றில் ஒன்றில் கூட ஆஸ்திரேலியா அணி தோற்றதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆஸ்திரேலியா அணியின் அறிமுக வீரரான சாம் கோன்ஸ்டாஸ் - உஸ்மான் கவாஜா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

ind vs aus virat kohli sam konstas vs

தொடக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்த சாம் கோன்ஸ்டாஸ் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா வீசிய ஒரே ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 18 ரன்களை விளாசி அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் சிராஜ் பவுலிங்கிலும் சிக்சரும், பவுண்டரியுமாய் பறக்க, அவர் 49 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

இதனால் கோன்ஸ்டாஸின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறிய போது, மறுமுனையில் உஸ்மான் கவாஜாவும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்க்க தொடங்கினார். முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில், சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் சுழலில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கோன்ஸ்டாஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினாலும், இன்னொரு பக்கம் கவாஜா ரன் குவிப்பை தொடர்ந்தார். சிறப்பாக ஆடிய அவர் 102 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த டெஸ்ட் தொடரில் கவாஜா அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். தொடர்ந்து பும்ராவின் வேகத்தில் கவாஜா 121 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா அணியின் இரு தொடக்க வீரர்களும் அரைசதம் அடித்திருப்பது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய போது, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் 9 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளனர். தற்போது 10வது முறையாக ஆஸ்திரேலியா தொடக்க வீரர்கள் அரைசதம் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதற்கு முன்பாக தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்த போது 9 முறையும் ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்தித்ததில்லை. இதனால் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 26, 2024, 11:25 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+