Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியா சொன்ன முடிவு.. அடம் பிடித்த பிசிசிஐ.. பரபர காட்சிகள்.. என்ன நடந்தது?

சிட்னி : பிசிசிஐ பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்களுக்கு கடும் குவாரன்டைன் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.

அதற்கு தீர்வாக ஆஸ்திரேலியா ஒரு முடிவை கூறி உள்ளது. பிசிசிஐ அதை தற்போது ஒப்புக் கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வருகிறது.

எனினும், பிசிசிஐ கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட ஒப்புக் கொள்ளும் என்றே தெரிகிறது. இது பற்றிய பின்னணி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குவாரன்டைன் கட்டுப்பாடுகள்

குவாரன்டைன் கட்டுப்பாடுகள்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது. குயின்ஸ்லாந்து மாநிலத்தை சேர்ந்த அந்த நகரில் தற்போது வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு கடும் குவாரன்டைன் கட்டுப்பாடுகள் உள்ளது.

வெளியேறக் கூடாது

வெளியேறக் கூடாது

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை அந்த மாநில அரசு விதித்துள்ளது. அதன்படி, வீரர்கள் ஹோட்டல் அறையில் தாங்கள் தங்கி இருக்கும் தளத்தை விட்டு வெளியேறக் கூடாது என கூறப்படுகிறது. இதைத் தான் பிசிசிஐ தளர்த்துமாறு கூறி வருகிறது.

ஒப்புதல்

ஒப்புதல்

எந்த தளத்தில் இருந்தாலும் இந்திய வீரர்கள் தங்களுக்குள் சந்தித்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிடம் கோரி உள்ளது பிசிசிஐ. அதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாய் மொழியில் ஒப்புதல் அளித்துள்ளது.

வாக்குறுதி அளிக்க முடியாது

வாக்குறுதி அளிக்க முடியாது

எனினும், அதை பிசிசிஐ ஏற்க மறுத்து, எழுத்துப்பூர்வமாக அதை எழுதி அளிக்குமாறு கோரி உள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பால் அப்படி வாக்குறுதி அளிக்க முடியாது. அரசு தான் இதில் முடிவெடுக்க வேண்டும். பிசிசிஐக்கு சாதகமாக இதில் முடிவு கிடைப்பது கடினம் தான்.

ஒப்புக் கொள்ளும்

ஒப்புக் கொள்ளும்

எப்படியும் பிசிசிஐ கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட ஒப்புக் கொள்ளும் என்றே முன்னாள் வீரர்கள் கருதுகிறார்கள். நேரடியாக ஒப்புக் கொள்ளாமல், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை அழுத்தத்தில் வைக்கவே பிசிசிஐ இவ்வாறு செய்து வருகிறது என்று கருதப்படுகிறது.

Story first published: Friday, January 8, 2021, 17:52 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+