Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- சிஎஸ்கே வீரருக்கு கட்டம் கட்டும் கம்பீர்.. வெஸ்ட் இண்டீஸ் பார்முலாவை கையில் எடுக்கும் சூர்யகுமார்

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பழைய ஃபார்முலாவை கையில் எடுக்க ஆயத்தம் ஆகி வருவதாக தெரிகிறது. டி20 போட்டிகளில் கம்பீர் வந்த பிறகு இந்திய அணி பலமான அணியாக விளங்குகிறது.

கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் விளையாடிய 22 போட்டிகளில் இந்திய அணி 20 போட்டிகளில் வென்று இருக்கிறது. கேப்டன் சூரியகுமார் யாதவ் அபாரமாக தனது திறமையை வெளிப்படுத்துகிறார். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடியது.

Ind vs Aus

ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் டி20 தொடர் நடைபெறுவதால் ஒன்று அல்லது இரண்டு சுழற்ப்பந்து வீச்சாளர்களை போதுமானது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வேகப்பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும் என்ற முடிவில் இந்தியா உள்ளது. தற்போது வேகப்பந்து வீச்சுப்படையில் பும்ரா இணைந்திருப்பது பெரும் பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.

ஆர்ஸ்தீப் மற்றும் ஹர்ஷித்ராணா என இளம் வேகப்பந்துவீச்சாளர்களும் உள்ளன. ஒரு வேலை இந்திய அணி மூன்று பிரத்தேயக வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினால் சுழற் பந்துவீச்சாளர் ஒருவர்தான் இடம் பெறுவார். அதுவே இரண்டு பிரத்யேக வேகப்பந்துவீச்சாளரை பயன்படுத்தினால் சுழற் பந்துவீச்சாளர் இருவரை பயன்படுத்தலாம். இதன் காரணமாக அணியில், வேகப்பந்துவீச்சை பலப்படுத்தும் விதமாக இரண்டு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை நடுவரிசையில் பயன்படுத்தலாம் என்ற முடிவில் சூரிய குமார் இருக்கின்றார்.

ஆனால் ஹர்திக் பாண்டியா இடத்தில் நிதிஷ் குமார் ரெட்டி போதும் என்றும் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு மூன்று பிரத்தேயக வேக பந்துவீச்சாளர்களை பயன்படுத்தலாம் என்ற முடிவில் கம்பீர் இருக்கின்றார். இவ்வாறு செய்தால் வெறும் ஏழு பேர் மட்டும் தான் பேட்டிங் செய்வார்கள். இது ஆஸ்திரேலிய ஆடுகளத்திற்கு சரிவராது என்ற கூறப்படுகிறது.

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி பயன்படுத்தும் ஃபார்முலாவை கொண்டுவர இந்தியா முடிவெடுத்துள்ளது. இதன்படி அதிக அளவு ஆல் ரவுண்டர்களை அணியில் சேர்க்க முடிவு எடுத்திருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டுமே பலமாகும். தற்போது அக்சர் பட்டேல் சிவம் துபே மற்றும் நிதிஷ் குமார் முடிந்தால் வாஷிங்டன் சுந்தர் என நான்கு ஆல்ரவுண்டர்களை பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Story first published: Monday, October 27, 2025, 22:03 [IST]
Other articles published on Oct 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+